உற்பத்தித்துறைக்கான எஸ்-பாஸ் 15 விழுக்காடாகக் குறைக்கப்படும்

உற்பத்தித்துறைக்கான எஸ்-பாஸ் 15 விழுக்காடாகக் குறைக்கப்படும்

2 mins read
67b4ab0e-3b31-4c76-bf5b-49833cc3410b
-

உற்­பத்­தித்­துறை அடுத்த ஆண்டு ஜன­வரி 1 முதல் தனது ஊழி­யர் அணி­யில் 18 விழுக்­காடு எஸ் பாஸ் வெளி­நாட்டு ஊழி­யர்­களை மட்­டுமே கொண்­டி­ருக்­கும். தற்­போது அது 20 விழுக்­கா­டாக உள்­ளது. 2023 ஜன­வரி 1 முதல் அது மேலும் குறைக்­கப்­பட்டு 15 விழுக்­கா­டாக இருக்­கும்.

அதன் பின்­னர் ஒர்க் பெர்­மிட், எஸ்-பாஸ் ஊழி­யர்­க­ளுக்­கான ஒட்டு­ மொத்த ஒதுக்­கீடு 60 விழுக்­கா­டாகத் தொட­ரும்.

எஸ்-பாஸ் ஊழி­யர்­க­ளின் குறைந்­த­பட்ச மாதச் சம்­ப­ளம் $2,500 என்­ப­தோடு அவர்­க­ளின் கல்­வித்­த­குதி தொழில்­நுட்­பர்­க­ளைப்­போல பட்­டம் அல்­லது பட்­ட­யம் (டிப்­ளோமா) வைத்திருக்கவேண்டும்.

சிங்­கப்­பூ­ரில் வெளி­நாட்டு ஊழி­யர் சார்ந்­தி­ருப்­பைக் குறைக்­கும் அர­சாங்­க முயற்­சி­க­ளின் ஒரு பகுதி இது என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தமது பட்­ஜெட் உரை­யில் குறிப்­பிட்­டார்.

அதே­நே­ரம் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வேலை­வாய்ப்பை அர­சாங்­கம் ஆத­ரிக்­கும். வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் திறன்­களை உள்­ளூர் ஊழி­யர்­கள் பெறும் வகை­யில் திறன்­களை மேம்­ப­டுத்­த­வும் அர­சாங்­கம் உத­வும் என்­றார் அவர்.

வெளி­நாட்டு ஊழி­யர் சார்­பு­நிலை குறித்­தும் அவர்­க­ளால் போட்டி உரு­வா­வது குறித்­தும் சிங்­கப்­பூர்­கள் கவ­லைப்­ப­டு­வதை திரு ஹெங் ஒப்­புக்­கொண்­டார்.

அதே­நே­ரம், உள்­ளூர் ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்­து­வ­தில் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­வ­தா­க­வும் உல­க­ள­வில் போட்­டித்­தன்­மை­யு­டன் நீடிக்க வெளி­நாட்டு ஊழி­யர் வரம்­பைக் கடு­மை­யாக்­கக் கூடாது என்­றும் பல்­வேறு தொழில்­துறையும் வர்த்­த­கச் சங்­கங்­களும் தெரி­வித்­துள்­ளன. அது குறித்து திரு ஹெங் தமது உரை­யில் குறிப்­பி­டும்­போது, "நாம் எடுக்­கும் முயற்­சி­கள் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் குறைந்த அளவு இருப்­பார்­களா, முழு­மை­யாக இருக்க மாட்­டார்­களா அல்­லது அதி­க­மாக வரு­வார்­களா என்­ப­வற்றை நோக்­கி­ய­தல்ல.

"இந்த சிறிய தீவு எந்த அள­வுக்­குத் தாங்­கும் என்­பதை நாம் ஒப்­புக்­கொள்ள வேண்­டும். சம­நி­லை­யைக் கடைப்­பி­டிக்க, உள்­ளூர், வெளி­நாட்டு மனி­த­வ­ளம் நிரப்­பப்­ப­டு­வ­தில் கவ­னம் செலுத்தி அதன் மூலம் தொழில்­துறை உரு­மாற்­றத்­திற்­கான முயற்­சி­களை அதி­க­ரிக்க வேண்­டும்," என்­றார்.

உற்­பத்­தித்­து­றை­யில் சுமார் 450,000 ஊழி­யர்­கள் வேலை செய்­கி­றார்­கள். இது மொத்த ஊழி­ய­ர் அணி­யில் சுமார் 12 விழுக்­காடு.