'விதிமீறல் விளைவுகளுக்கு அஞ்சி மாணவர் உயிரை மாய்த்திருக்கலாம்'

'விதிமீறல் விளைவுகளுக்கு அஞ்சி மாணவர் உயிரை மாய்த்திருக்கலாம்'

1 mins read
14d753d3-c157-4bff-8bda-b796e830da44
படம்: SCREENGRAB FROM GOOGLE MAPS -

ஹோட்­டல் ஒன்­றில் 14 நாட்­கள் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்ற வேண்­டிய நிலை­யில், இலங்­கை­யைச் சேர்ந்த சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒரு­வர் தன் அறையை விட்டு பல­முறை வெளி­யே­றி­னார். விக்­டோ­ரியா ஸ்தி­ரீட் ஹோட்­ட­லின் 13வது மாடி­யில் தங்­கி­யி­ருந்த 20 வயது திரு நிஷாட் மணில்கா டி ஃபோன்செக்கா, சென்ற ஆகஸ்ட் மாதத்­தில் தன் அறை­யி­லி­ருந்து பல­முறை வெளி­யேறி அதே மாடி­யில் தங்­கி­யி­ருந்த ஒரு பெண் நண்­ப­ரின் அறைக்­குச் சென்­றார்.

பாது­கா­வல் அதி­காரி ஒரு­வர் வந்து சோத­னை­யிட்­ட­தில் அவர் சிக்­கிக்­கொண்­டார்.

இரண்டு நாட்­கள் கழித்து திரு நிஷாட் தன் அறை­யில் உயி­ரி­ழந்த நிலை­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டார்.

தனிமை உத்­த­ரவை மீறி­ய­தற்­கா­கத் தான் சந்­திக்­க­வி­ருக்­கும் விளை­வு­களை எண்ணி திரு நிஷாட் தன் உயிரை மாய்த்­தி­ருக்­கக்­கூ­டும் என்று புலன்­வி­சா­ரணை அதி­காரி நேற்று நீதி­மன்­றத்­தில் கூறி­னார்.

அறையை விட்டு வெளி­யே­றி­யது தொடர்­பில் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­ட­தா­க­வும் தமக்கு எழுத்­து­பூர்வ விளக்­கம் வேண்­டும் என்று இறந்­த­வ­ரி­டம் பல்­க­லைக்­க­ழ­கம் கேட்­டி­ருந்­த­தா­க­வும் அறி­யப்­ப­டு­கிறது.