தெக் வாய் கொலை வழக்கு விசாரணை: வாடகை தொடர்பில் கத்தியால் குத்தியவர் மீது குற்றம்

இருப்­பி­டம் ஏது­மில்­லாத முகம்­மது ரோஸ்லி அப்­துல் ரஹிம், கீழ்த்­தளங்­க­ளி­லும் வீடு­க­ளுக்கு வெளி­யி­லும் தூங்­கிக்­கொண்­டி­ருந்­தார். அவ­ருக்கு அறி­மு­க­மில்­லாத முகம்­மது ரோஸ்­லான் ஸாய்னி, 35, ரோஸ்­லியை அணுகி, தாம் தங்­கி­யி­ருக்­கும் வீட்­டில் இட­ம­ளிக்க விரும்­பு­வ­தா­க­வும் வீட்டு வாட­கை­யில் பாதியை ரோஸ்லி செலுத்­தி­னால் போதும் என்­றும் கூறி­னார்.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தில் இரு­வ­ரும் தங்­க­ளின் பெயர்­களை இணை-வாட­கை­தா­ரர்­களாகப் பதிவு செய்­து­கொண்­ட­னர்.

ஆனால், சில மாதங்­க­ளுக்­குப் பின் ரோஸ்­லான் தன்­னி­டம் கூடு­தல் வாட­கைப் பணத்தை வசூ­லிப்­ப­தாக சந்­தே­கப்­பட்­டார் ரோஸ்லி.

வாடகை மற்­றும் வீட்­டின் பய­னீட்­டுக் கட்­ட­ணங்­கள் தொடர்­பாக ரோஸ்­லா­னு­டன் ஆகஸ்ட் 16, 2017ல் வாக்­கு­வா­தம் செய்ய, அது உயி­ரைப் பறிக்­கும் கத்­திக்­குத்­துச் சம்­ப­வ­மாக மாறி­யது.

ரோஸ்­லி­யின் கொலை வழக்கு விசா­ரணை நேற்று தொடங்­கி­யது. ரோஸ்­லா­னின் இத­யத்­தைத் தைக்­கும் அள­வுக்கு சுமார் 13 சென்­டி­மீட்­டர் ஆழத்­துக்கு ரோஸ்லி கத்தி­யால் குத்­தி­யது வேண்­டு­மென்றே செய்­யப்­பட்­ட­தாக அர­சுத்­த­ரப்பு உயர் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தது.

மேலும், இறந்­த­வ­ரின் வலது தொடை­யி­லும் வலது கையி­லும் குத்­தி­ய­து­டன் மேல்­மு­துகு, வலது கை, கட்­டை­வி­ரல்­கள் ஆகி­ய­வற்­றில் பல வெட்­டுக் காயங்­களை ரோஸ்லி இழைத்­தார்.

வீட்­டுக்கு வந்­தி­ருந்த விருந்­தினர் இரு­வ­ரு­டன் இரண்டு ஆட­வர்­களும் படம் பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­போது பணம் தொடர்­பான வாக்­கு­வா­தம் எழுந்­த­தா­க­வும் இறந்­த­வர் கூறிய சொற்­க­ளைக் கேட்டு ஆத்­தி­ர­ம­டைந்த ரோஸ்லி, சமை­ய­ல­றைக்­குச் சென்று கத்­தியை எடுத்து வந்து தாக்­கி­ய­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. 51 வய­து­டைய ரோஸ்லி மீதான வழக்கு விசா­ரணை தொடர்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!