சிங்கப்பூரில் இன்று (பிப்ரவரி 17) புதிதாக 11 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுடன் சேர்த்து கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,821க்கு அதிகரித்துள்ளது.
உள்ளூர் சமூகத்தில் ஒருவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தங்குவிடுதிகளில் உள்ள ஊழியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் அது கூறியது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பத்து பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். சிங்கப்பூர் வந்ததும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
நேற்று இங்கு ஒருவர் மட்டும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வேலை அனுமதி அட்டை வைத்துள்ள இவர், இந்தோனீசியாவிலிருந்து வந்தவர். சிங்கப்பூர் வந்ததும் தனிமைப்படுத்தப்பட்டார்.
நேற்றைய நிலவரப்படி, 59,646 பேர் கொவிட்-19லிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒருவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதர 90 பேர் சமூக வசதிகளில் தங்கி குணமடைந்து வருகின்றனர்.
சிங்கப்பூரில் கிருமித் தொற்று காரணமாக 29 பேர் உயிரிழந்தனர்.

