யாரோ கொடுத்த கல்லீரல் கைக்குழந்தையைக் காப்பாற்றியது

தன்­ன­லம் பாரா­மல் யாரோ ஒரு­வர் கொடை­யா­கக் கொடுத்த கல்­லீ­ரல் கைக்­கு­ழந்தை ஒன்றை வாழ வைத்து வரு­கிறது.

ரேனால் என்ற அந்­தப் பெண் குழந்தை பிறந்து 45 நாட்­கள் ஆன நிலை­யில் அதன் கல்­லீ­ரல் சரி­இல்லை என்­பது தெரி­ய­வந்­தது.

கல்­லீ­ரல் சுரக்­கும் பித்தநீரை பித்தப் பைக்­குக் கொண்டு செல்லும் நாளம் அழன்று இருந்­தது.

அத­னால் பித்தநீர், பித்தப் பைக்­குச் செல்­வது தடை­பட்­டது. இதனால் கல்­லீ­ரல் செயல் இழந்­து­ வி­டக்­கூடிய ஆபத்து இருந்­தது.

அந்­தக் குழந்­தைக்குச் சென்ற செப்­டம்­ப­ரில் 17 மாத வய­தான போது குழந்­தை­யைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்­கள், கல்­லீ­ரலை மாற்­றி­னா­லொ­ழிய குழந்தை ஆறு மாதத்­துக்கு மேல் உயிர்­வாழ முடி­யாது என்று சொல்­லி­விட்­டார்­கள்.

அந்­தக் கைக்­கு­ழந்­தை­யின் தந்தை திரு ரோகர் வோங்­கின் கல்­லீ­ரல் குழந்­தைக்­குப் பொருந்­த­வில்லை. குழந்­தை­யின் தாயா­ரான திரு­வாட்டி விக்கி செங் அப்­போது கர்ப்­பி­ணி­யாக இருந்­தார்.

இத­னால் அந்­தப் பெற்­றோர் ஃபேஸ்புக்­கில் அவ­சர வேண்­டு­கோள் விடுத்­த­னர். மூன்று மாதம் கழித்து ஜன­வரி 6ஆம் தேதி சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­கழக மருத்­து­வ­மனை யாரோ ஒரு­வர் கொடை­யாக வழங்­கிய கல்­லீ­ரல் அந்­தக் குழந்­தைக்­குப் பொருத்­த­மாக இருப்­ப­தைக் கண்­ட­றிந்­தது.

தொடர்ந்து ஜன­வரி 20ஆம் தேதி குழந்தை ரேனா­லுக்கு அறுவை­ சி­கிச்சை வெற்­றி­க­ர­மாக நடந்­தது.

அதற்கு இரண்டு வாரம் கழித்து அந்­தக் குழந்தை பொதுப் பிரிவிற்கு மாற்­றப்­பட்டு இப்­போது அங்கே கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கிறது.

தங்­க­ளு­டைய நிலை­மை­யைப் பற்றி ஃபேஸ்புக்­கில் பல­வற்­றை­யும் தெரி­வித்து திரு ரோகர் தம்­பதி வேண்­டு­கோள் விடுத்­ததை அடுத்து $100,000 கொடை திரண்­டது.

அது கல்­லீ­ரல் பொருத்­த­மா­னது­தானா என்­ப­தைக் கண்­ட­றிய நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னைக்கு ஆன செலவை ஈடு­செய்­தது.

இத­னி­டையே, அன்­றா­டம் மருத்­து­வ­ம­னைக்குப் பெற்­றோர் சென்று வர வேண்­டிய நிலை­மையை அறிந்த ‘ரோனால்ட் மெக்­டோனல்ட் ஹவுஸ் சேரிட்­டிஸ்’ என்ற அறப்­பணி அமைப்பு அந்த மருத்­து­வ­மனை­யி­லேயே அத்­தம்­ப­தி­யர் தங்க ஓர் இடத்தை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தது.

கல்­லீ­ரல் கொடை கொடுத்த வள்­ள­லுக்­கும் மருத்­து­வ­மனை ஊழி­யர்­க­ளுக்­கும் இதர பல வழி­களில் பல்­வேறு உத­வி­க­ளைச் செய்த எல்­லா­ருக்­கும் இத்­தம்­ப­தி­யர் தங்­கள் மன­மார்ந்த நன்­றியைத் தெர­வித்­துக்­கொண்­ட­னர்.

நிதி அள­வி­லும் மன­த­ள­வி­லும் இதர வழி­க­ளி­லும் இந்த அள­வுக்கு ஆத­ர­வை­யும் அன்­பை­யும் உத­வியை­யும் பெற தாங்­கள் கொடுத்து வைத்­தி­ருக்க வேண்­டும் என்று அவர்­கள் குறிப்­பிட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!