தடுப்பூசி போட்டுக்கொள்ள இணையம் வழி முன்பதிவு

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள விரும்­பும் 70 மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டைய மூத்­தோர், தடுப்­பூசி போடு­வ­தற்­கான அழைப்­புக் கடி­தத்­தைப் பெறாவிட்டாலும் preregister.vaccine.gov.sg என்ற இணை­யப்­பக்­கத்­தில் தங்­க­ளது விருப்­பத்­தைப் பதிவு செய்து ஊசி­ போட முன்­ப­திவு செய்­து­கொள்­ள­லாம்.

“தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தற்­கான முன்­ப­திவு நேரம் பற்­றிய விவ­ரங்­கள் 70 மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டை­ய­வர்­க­ளுக்கு படிப்­ப­டி­யாக அனுப்­பப்­ப­டு­கின்­றன. உங்­க­ளது விருப்­பத்­தைப் பதிவு செய்­யுங்­கள். இணை­யம் வழி­யாக முன்­ப­திவு செய்­வது குறித்து தங்­க­ளுக்கு குறுஞ்­செய்தி வாயி­லாக தெரி­யப்­ப­டுத்­து­வோம்,” என அந்த இணை­யப் பக்­கத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

“இந்­தப் படி­வத்­தைப் பூர்த்தி செய்ய முடி­யா­த­வர்­கள், பதிவு செய்ய விரும்­பி­னால் சமூக நிலை­யத்­தையோ அல்­லது சுகா­தார அமைச்­சின் கொவிட்-19 நேரடி அழைப்பு தொலை­பேசி எண்ணையோ (1800-333-999) அழைக்­க­லாம்,” என்­றும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள அழைப்பு விடுக்­கும் கடி­தங்­கள் மூத்­தோ­ருக்குத் தொகுப்­பு­க­ளாக அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அந்­தக் கடி­தத்­தில் இருக்­கும் 10 இலக்க எண்­ணைப் பயன்­ப­டுத்­தி­த்தான் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முன்­ப­திவு செய்ய முடி­யும். அழைப்­புக் கடி­தம் தங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளதா என்­பதை அறிய 1800-333-999 என்ற எண்­ணில் மூத்­தோர் தொடர்­பு­கொள்­ள­லாம்.

சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் 16 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்கு தடுப்­பூசி போடப்­ப­டு­கிறது. அது இல­வ­சம். கடு­மை­யான ஒவ்­வாமை விளை­வு­கள் கொண்­டி­ருப்­போ­ரும் நோயெ­திர்ப்­பாற்­றல் குறை­வா­ன­வர்­களும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாமா என்­பது பற்றி மருத்­து­வர்­க­ளிடம் ஆலோ­சனை பெற­லாம்.

இணையப்பக்கத்தில் பதிவு செய்வோருக்கு...

தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விருப்பத்தை இணையப் பக்கத்தில் பதிவு செய்வோருக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தியில் கொடுக்கப்படும் இணைப்பின் வழியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்யமுடியும்.

அந்த இணைப்பில் தங்களது பிறந்த தேதி, அடையாள அட்டை எண் போன்றவற்றை உள்ளிட்டு, தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் நிலையத்தையும் தடுப்பூசியின் 2 தவணைகளைப் போட்டுக்கொள்வதற்காக 21 முதல் 28 நாட்கள் இடைவெளியுடன் இரண்டு தேதிகளையும் அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். சிங்கப்பூரில் இதுவரை 250,000க்கும் மேற்பட்டோருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியும் 55,000 பேருக்கு 2 தவணை தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!