30 மாணவர் பராமரிப்பு நிலையங்களில் 4,200 சிறார்

இனம் சார்ந்த சுயஉத­விக் குழுக்­கள் பள்­ளி­களில் மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களை அமைக்க வேண்­டும் என்று கூட்­டாக இணங்­கிய ஐந்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, அத்­த­கைய 30 நிலை­யங்­கள் இப்­போது செயல்­ப­டு­கின்­றன.

அவற்­றில் இரண்டு நிலை­யங்­கள் கடந்த மாதம் சிஷான் தொடக்­கப் பள்­ளி­யி­லும் ஸாங்ட தொடக்­கப் பள்­ளி­யி­லும் செயல்­படத் தொடங்­கின என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அமைச்­சர்­கள், சீனர் மேம்­பாட்டு உதவி மன்­றம், யூரே­ஷி­யர் சங்­கம், சிண்டா எனப்­படும் சிங்­கப்­பூர் இந்தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம், மெண்­டாக்கி ஆகி­ய­வற்­றின் பிர­தி­நி­தி­கள் நேற்று ஸாங்ட தொடக்­கப் பள்­ளி­யில் செயல்­படும் ‘பிக் ஹார்ட்’ மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் ஒன்று கூடி தங்­கள் கூட்டு முயற்­சி­யின் ஆண்டு நிறை­வை­யும் புதிய நிலை­யங்­க­ளின் திறப்பு விழா­வை­யும் கொண்­டா­டி­னர்.

‘பிக் ஹார்ட்’ மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் 4,200க்கு மேற்­பட்ட மாண­வர் பதிந்­து­கொண்­டுள்­ள­னர்.

“சுய உத­விக் குழுக்­கள் மற்­றும் சமூக பங்­கா­ளி­க­ளின் ஆத­ர­வு­டன், அனைத்­துப் பின்­பு­லங்­க­ளி­லி­ருந்து வரும் மாண­வர்­க­ளுக்­குத் தர­மான, கட்­டுப்­ப­டி­யா­கக்­கூ­டிய பள்­ளிக்­குப் பிந்­திய பரா­ம­ரிப்பை வழங்க வேண்­டும் என்ற நோக்­கத்தை ‘பிக் ஹார்ட்’ அமைப்பு அடைந்­துள்­ளது.

“கொவிட்-19 நில­வ­ரத்­தால் பொரு­ளி­யல் பாதிக்­கப்­பட்­டுள்ள இந்­தத் தரு­ணத்­தில் நாங்­கள் கொண்­டி­ருக்­கும் இலக்கு மாண­வர்­க­ளுக்­குப் பெரி­தும் கைகொ­டுக்­கிறது,” என்­றார் சுய உத­விக் குழுக்­க­ளின் மாண­வர் பரா­ம­ரிப்பு அமைப்­பின் தலை­வ­ரும் தென்­மேற்கு வட்­டார மேய­ரு­மான திரு­வாட்டி லோ யென் லிங்.

“ சுய உத­விக் குழுக்­கள் ஒன்று சேர்ந்து மாண­வர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு ‘பிக் ஹார்ட்’ மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­யம் ஒரு முக்­கிய தள­மா­கத் திகழ்­கிறது.

“தங்­கள் சமூ­கத்­தில் உள்ள மாண­வர்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு சுய உத­விக் குழுக்­கள் மேற்­கொண்­டுள்ள திட்­டங்­க­ளுக்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் இத்­திட்­ட­மும் முக்­கிய அங்­கம் வகிக்­கிறது,” என்­றார் சீனர் மேம்­பாட்டு உதவி மன்­றத்­தின் தலை­வ­ரும் போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ரு­மான ஓங் யி காங்.

“அனைத்­துப் பின்­பு­லங்­க­ளி­லிருந்து வரும் மாண­வர்­கள் கற்­ப­தற்­கும் வளர்­வ­தற்­கும் ஏற்ற அனை வரையும் உள்­ள­டக்­கக்­கூ­டிய சுற்­றுச்­சூ­ழலை ஏற்­ப­டுத்­து­வ­தில் சுய உத­விக் குழுக்­கள் பாராட்­டத்­தக்க பணி­யைச் செய்­துள்­ளன,” என்­றார் அமைச்­ச­ர­வை­யில் யூரே­ஷி­யர்­க­ளின் பிர­தி­நி­தி­யும் தொடர்பு, தக­வல் அமைச்­ச­ரு­மான எஸ். ஈஸ்­வ­ரன்.

“பள்­ளிக்­குப் பிந்­திய ஒரு பாது­காப்­பான ஆக்­க­பூர்­வ­மான சுற்­றுச்­சூ­ழலை ‘பிக் ஹார்ட்’ மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­யம் வழங்­கி­யுள்­ளது. அங்கு அவர்­கள் தங்­கள் வகுப்­பறை பாடங்­களில் கூடு­தல் பயிற்சி பெற­வும் நல்ல சமூக நட­வடிக்­கை­களில் ஈடு­ப­ட­வும் முடி­கிறது,” என்­றார் சிண்­டா­வின் தலை­வ­ரும் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரு­மான இந்­தி­ராணி ராஜா.

மெண்­டாக்­கி­யின் தலை­வ­ரும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­ச­ரு­மான மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி இது­பற்றி கருத்­து­ரைக்­கை­யில், “பல்­வேறு கல்­வித் திட்­டங்­களை வழங்கி வரும் ‘பிக் ஹார்ட்’ மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­யம் மாண­வர்­க­ளின் மீட்­சித் திறனை வளர்த்து அவர்­க­ளின் மேம்­பாட்டை வலுப்­படுத்­து­கிறது.

“இந்த முயற்சியில் சுயஉத­விக் குழுக்­கள் அனைத்­தும் இதற்கு தொடர்ந்து ஆத­ர­வ­ளிக்­கும்,” என்­றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!