உணவங்காடி நிலையக் கடைக்காரர்கள் மோசடிகளை எதிர்த்துப் போராட ‘நெட்ஸ்’ கட்டண முறையில் புதிய அம்சங்கள்

சிங்­கப்­பூ­ரில் உள்ள அங்­காடி நிலை யக் கடைக்­கா­ரர்­களில் பாதிக்கு மேற்­பட்­ட­வர்­கள் ரொக்­க­மில்­லாக் கட்­டண முறையை ஏற்­றுக்­கொண்­டுள்ள வேளை­யில், மின்­னி­யல் கட்­டண சேவை வழங்­கு­ந­ரான நெட்ஸ், உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர்­கள் கட்­டண மோச­டியை எதிர்த்­துப் போராட புதிய அம்­சங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

உண­வங்­காடி நிலை­யக் கடைக்­கா­ரர்­களும் சிறிய சில்­லறை விற்­பனைக் கடை உரி­மை­யா­ளர்களும் பயன்­ப­டுத்­தும் NETSBiz செய­லி­யில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மேம்­பாட்டு அம்­சங்­களில் பெரிய எழுத்­து­கள், தெளி­வாகத் தெரி­யும் கட்­டண அறி­விப்­பு­கள், புதிய பரி­வர்த்­த­னை­களை அடை­யா­ளம் காட்ட வண்­ணங்­கள் ஆகி­யவை அடங்­கும்.

இந்த மாற்­றங்­கள் அடுத்த மாதம் நடை­மு­றைக்கு வரும் என்­றும் உண­வங்­காடி நிலை­யக் கடைக்­கா­ரர்­கள் தங்­கள் பரி­வர்த்­த­னை­களை எளி­தில் புரிந்­து­கொள்ள உத­வும் என்­றும் கூறி­னார் தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன்.

“கடைக்­கா­ரர்­கள் தெரி­வித்த கருத்­து­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்தப் புதிய அம்­சங்­கள் வடி­வமைக்­கப்­பட்­டுள்­ளன. கட்­டண மோசடி என்­பது அனைத்து பரி­வர்த்­த­னைத் தளங்­க­ளி­லும் உள்­ளது. அவற்­றுக்கு எதி­ராக உண­வங்­காடி நிலை­யக் கடைக்­கா­ரர்­கள் எவ்­வாறு விழிப்­பு­டன் இருக்­க­லாம் என்­ப­தற்­கான கூடு­தல் தக­வல்­களை அவர்­க­ளுக்­குத் தெரி­விக்க வேண்­டும்,” என்­றார் அமைச்­சர்.

தற்­போது ‘ஹாக்­கர்ஸ் கோ டிஜிட்­டல்’ திட்­டத்­தில் 10,000 பேர் சேர்ந்து மின்­னி­யல் கட்­ட­ணங்­களை ஏற்­றுக்­கொண்­டுள்­ள­னர்.

கடந்த மாதம் $14 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட மதிப்­புள்ள 1.2 மில்­லி­ய­னுக்கு அதி­க­மான பரி­வர்த்­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன என்­ப­தைச் சுட்­டிய திரு ஈஸ்­வ­ரன், “இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்­தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தி­லி­ருந்து நான்கு மடங்கு வளர்ச்சி,” என்­றும் விளக்­கி­னார்.

‘ஹாக்­கர்ஸ் கோ டிஜிட்­டல்’ திட்­டம், எல்லா 18,000 கடைக்­கா­ரர்­களும் தேசிய மின்­னி­யல் கட்­டண முறை­யான SGQR திட்­டத்தை ஏற்­றுக்­கொள்ள இலக்கு கொண்­டுள்­ளது. இத்­திட்­டத்­தில் சேர்ந்து மின்­னி­யல் கட்­டண முறையை ஏற்­றுக்­கொள்­ளும் உண­வங்­காடி நிலை­யக் கடைக்­கா­ரர்­க­ளுக்கு $1,500 வரை போனஸ் வழங்­கப்­ப­டு­கிறது.

அந்த வகை­யில் 7,400 பேருக்கு இந்த போனஸ் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­குத் தகுதி பெறும் காலம் கடந்த ஆண்டு டிசம்­பர் 31ஆம் தேதி­யாக இருந்­தது. இன்­னும் அதி­க­மா­னோர் இத்­திட்­டத்­தில் சேர ஊக்­கு­விக்­கும் வகை­யில் அது இப்­போது இவ்­வாண்டு மே 31ஆம் தேதிக்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!