விழாக்காலத்துக்குப் பிறகும் கடுமையான விதிகள்

சீனப் புத்­தாண்டை முன்­னிட்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட கடு­மை­யான கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் விழாக்­கா­லத்­துக்­குப் பிறகு சில வாரங்­கள் தொட­ரும் என்று கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தக் கட்­டுப்­பா­டு­க­ளால் கொவிட்-19 நில­வ­ரம் சற்று மேம்­பட்­டுள்­ளது என்­றா­லும் அத­னால் உட­ன­டி­யாக கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வது சாத்­தி­ய­மல்ல என்­றும் கூறி­னார் கொவிட்-19க்கு எதி­ரான அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு வோங்.

“கிரு­மிப் பர­வல் முறி­ய­டிக்­கப்­பட சில காலம் பிடிக்­கும் என்­ப­தால், சீனப் புத்­தாண்டு விழாக்­கா­லத்­துக்­குப் பிறகு ஒரிரு அல்­லது சில வாரங்­கள் கண்­கா­ணிக்க வேண்­டி­யி­ருக்­கும். அப்­போ­தும் நிலைமை சீராக, கட்­டுக்­குள் இருந்­தால், கட்­டுப்­பா­டு­களைச் சற்று தளர்த்­து­வது பற்றி பரி­சீ­லிப்­போம்,” என்று திரு வோங் ஜாலான் புசார் சமூக மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற கொவிட்-19 தடுப்­பூசி போடும் நிகழ்­வைப் பார்­வை­யிட்ட பிறகு செய்தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

ஒரு குடும்­பத்­தைக் காண எட்டு வரு­கை­யா­ளர்­களே ஒரு நாளைக்கு வர முடி­யும், வீட்டை விட்டு வெளியே வரும்­போ­தும் மற்­ற­வர்­களைச் சந்­திக்க அவர்­க­ளின் வீட்­டுக்­குச் செல்­லும்­போ­தும் தனி­ந­பர்­கள் எப்­போ­தும் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும் என்பன போன்­றவை கடந்த மாதம் அறி­விக்­கப்­பட்ட கூடு­தல் கட்­டுப்­பா­டு­களில் அடங்­கும்.

இந்த விழாக்­கா­லத்­தில் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களும் அதி­க­ரித்­தன. விதி­மு­றை­களை மீறும் தனி­ந­பர்­க­ளுக்­கும் வர்த்­த­கர்­க­ளுக்­கும் எதி­ரா­கக் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் எச்­ச­ரிக்­கப்­பட்­டது.

“கடந்த ஆண்டு கிறிஸ்­மஸ் பண்­டிகை முடிந்து புத்­தாண்டு தொடங்­கி­ய­போது சமூக அள­வில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­தன. கடந்த மாதம் மூன்­றா­வது வாரத்­தில் 21 சமூக அள­வி­லான கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின. அதற்கு முந்­திய வாரத்­தில் அது 3ஆக இருந்­தது.

“இது எங்­க­ளுக்­குக் கவலை அளித்­தது. ஆக கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்­கு­வ­தைத் தவிர வேறு வழி­யில்லை என்ற முடி­வுக்கு வந்­தோம். அதி­லி­ருந்து நிலைமை சற்று முன்­னேற்­றம் அடைந்­துள்­ளது. இருந்­தா­லும் அடுத்து என்ன நடக்­கும் என்று இப்­போ­தைக்குச் சொல்ல முடி­யாது,” என்று குறிப்­பிட்ட அமைச்­சர், ஒத்­து­ழைப்பு நல்­கிய சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!