'மாடல்' அழகிகளை பாலியல் சேவைக்கு அனுப்பிய பெண்

'மாடல்' அழகிகளை பாலியல் சேவைக்கு அனுப்பிய பெண்

1 mins read
4dd5823f-fd27-462f-bf93-46951c90a421
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

விளம்பர (மாடல்) அழ­கி­களை பாலி­யல் சேவை­களில் ஈடு­ப­டுத்தி அதன்­மூ­லம் கிடைத்த வரு­மா­னத்­தில் வாழ்க்கை நடத்­திய 38 வய­துப் பெண்­ணுக்கு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

'எலிக்­ஸிர் இவென்ட்' என்­னும் நிறு­வ­னத்தை நடத்தி வந்த முன்­னாள் விளம்பர அழ­கி­யான ஃபர்­லிண்டா டான் என்­னும் அவர், தம்­மி­டம் பணி­பு­ரிந்த 'ஃப்ரீலான்ஸ் மாடல்' அழ­கி­களை ஆண் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்குத் துணை­யாக அனுப்பி வந்­தார்.

அவ்­வாறு செல்­லும்­போது அந்த ஆண்­க­ளுக்கு பாலி­யல் சேவை­க­ளை­யும் வழங்க வேண்­டும் என்­பது அந்­தப் பெண்­ணுக்­குத் தெரி­யும் என அர­சாங்க வழக்­க­றி­ஞர் குறிப்­பிட்­டார்.

மாதந்­தோ­றும் இரு­முறை விப­சா­ரம் செய்ய அழ­கி­களை அனுப்பி வைத்­தார் என்­றும் அதற்­காக வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் $1,300 முதல் $1,500 வரை கட்­ட­ணம் வசூ­லித்து வந்­தார் என்­றும் அவர் கூறி­னார்.

இந்த வரு­மா­னத்­தில் 40 விழுக்­காட்டை ஃபர்­லிண்டா டான் தம்­வ­சம் வைத்­துக்­கொள்­வார். இச்செயல்­கள் தெரிய வந்­த­தும் 2019 நவம்­ப­ரில் அவர் கைது செய்­யப்­பட்­டார்.

இருவித குற்­றங்­க­ளுக்­காக அப்பெண் ணுக்கு நேற்று ஐந்து மாத சிறைத் தண்­ட­னை­யும் $920 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டன.