இந்தியாவில் லட்சுமி விலாஸ் வங்கியைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டதன் தொடர்பில் தான் அங்கு வழக்குகளை எதிர்நோக்குவதாக சிங்கப்பூரின் டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் குழுமம் தெரிவித்தது.
புளூம்பர்க் செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்கு அளித்த பதிலில் டிபிஎஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் தேதிக்கு முன்னதாக தள்ளுபடி செய்யப்பட்ட லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளையும் முறிகளையும் வைத்திருப்போர், இந்தியாவில் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் டிபிஎஸ் உள்ளூர் கிளைக்கு எதிராக வழக்குத் தொடுத்து இருக்கிறார்கள் என்று டிபிஎஸ் குறிப்பிட்டுள்ளது. லட்சுமி விலாஸ் வங்கிப் பற்றுமானம் நவம்பர் 27ல் பூர்த்தியானதாக இந்த மாதத் தொடக்கத்தில் டிபிஎஸ் தெரிவித்து இருந்தது.

