$500 மில்லியன் வீட்டு மானியம் வழங்கப்பட்டுள்ளது

மேம்பட்ட மத்திய சேம நிதி வீடமைப்பு மானியம் 2019 செப்டம்பரில் தொடங்கப்பட்டது

மேம்­பட்ட மத்­திய சேம நிதி (மசேநி) வீட­மைப்பு மானி­யம் கடந்த 2019ஆம் ஆண்டு செப்­டம்­ப­ரில் தொடங்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து, முதல்­மு­றை­யாக வீடு வாங்­கிய ஏறக்­கு­றைய 15,600 பேருக்கு மொத்­தம் கிட்­டத்­தட்ட $500 மில்­லி­யன் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இது­போக, நெருக்­கத்தை ஊக்கு­விக்­கும் வீட்டு மானி­யம் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து, ஏறத்­தாழ 40,200 குடும்­பங்­க­ளுக்கு $748 மில்­லி­யன் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் (வீவக) நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

கடந்த ஆண்டு டிசம்­பர் 31ஆம் தேதி நில­வ­ரப்­படி மேற்­கூ­றப்­பட்ட இந்­தத் தொகை வழங்­கப்­பட்­டுள்­ளது.

முதல்­மு­றை­யாக வீடு வாங்­கும் தகு­தி­பெ­றும் விண்­ணப்­ப­தா­ரர்­களுக்கு $80,000 வரை மேம்­பட்ட மசேநி மானி­யம் வழங்­கப்­ப­டு­கிறது.

தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் புது வீடு அல்­லது மறு­விற்­பனை வீடு எது வாங்­கி­னா­லும், வீட்டு வகை மற்­றும் இடம் எது­வாக இருந்­தா­லும் வீடு வாங்­கு­வோர் இந்த மானி­யத்­திற்­குத் தகு­தி­பெ­று­வர்.

இந்த மானி­யத்­தைப் பெற்­றுக்­கொண்ட 15,600 குடும்­பங்­களில் 7,700 குடும்­பங்­கள் முதன்­மு­றை­யாக புது வீடு வாங்­கின. அவை மொத்­தம் $270 மில்­லி­யன் மானி­யத்­தைப் பெற்­றன.

முதன்­மு­றை­யாக மறு­விற்­பனை வீடு வாங்­கிய மேலும் 7,900 குடும்­பங்­கள், $226 மில்­லி­யன் மானி­யத்­தைப் பெற்­றன.

இது­போக, மறு­விற்­பனை வீடு வாங்கி இந்த மானி­யத்­திற்கு விண்­ணப்­பித்­துள்ள மேலும் 400 குடும்­பங்­கள், மறு­விற்­பனை பரி­வர்த்­தனை முடி­வ­டைந்­த­தும் மானி­யத்­தைப் பெற்­றுக்­கொள்­ளும்.

முன்பு தேசிய வளர்ச்சி அமைச்­ச­ராக இருந்த திரு லாரன்ஸ் வோங் இந்த மேம்­பட்ட மசேநி வீட­மைப்பு மானி­யத்தை 2019ல் அறி­வித்­தி­ருந்­தார்.

முன்­பி­ருந்த கூடு­தல் மசேநி வீட­மைப்பு மானி­யத்­திற்­கும் சிறப்பு மசேநி வீட­மைப்பு மானி­யத்­திற்­கும் பதி­லாக இந்த மேம்­பட்ட மானி­யம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

மானி­யம் வழங்­கும் முறையை எளி­மை­யாக்­க­வும் முதன்­மு­றை­யாக வீடு வாங்­கு­வோ­ருக்கு வீட்டு விலை கட்­டுப்­ப­டி­யாக இருப்­பதை உறு­தி­செய்­ய­வும் இந்த மாற்­றங்­கள் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாக திரு வோங் கூறி­யி­ருந்­தார்.

மேம்­பட்ட மசேநி மானி­யத்­திற்­குத் தகு­தி­பெற வரு­மான வரம்பு $9,000. முன்­பி­ருந்த இரு மானி­யங்­க­ளுக்­கான வரு­மான வரம்­பை­விட இது அதி­கம்.

நெருக்­கத்தை ஊக்­கு­விக்­கும் வீட்டு மானி­யம் 2015ல் தொடங்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து 40,900 விண்­ணப்­பங்­கள் கிடைக்­கப்­பெற்­றன.

2015 ஆகஸ்ட் 24ஆம் தேதிக்­கும் கடந்த ஆண்டு டிசம்­பர் 31ஆம் தேதிக்­கும் இடை­யில் கிடைக்­கப்­பெற்ற 121,600 மறு­விற்­பனை விண்­ணப்­பங்­களில் அவை 34 விழுக்­கா­டா­கும். அவற்­றில் 40,200 குடும்­பங்­கள் அந்த மானி­யத்­தைப் பெற்­றன.

நெருக்­கத்தை ஊக்­கு­விக்­கும் வீட்டு மானி­யத்­தைப் பெற்­றுக்­கொண்ட விண்­ணப்­ப­தா­ரர்­களில் 78 விழுக்­காடு குடும்­பங்­கள். எஞ்­சி­ய­வர்­கள் ஒற்­றை­யர்­கள். மானி­யத்­தைப் பெற்­றுக்­கொண்ட 55 விழுக்­காட்­டி­னர் முதிர்ச்­சி­ய­டை­யாத பேட்­டை­களில் வீடு வாங்­கி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!