முதன்முறையாக மின்னிலக்க முறையில் சிங்கே அணிவகுப்பு

கொவிட்-19 சூழல் கார­ண­மாக இவ்­வாண்டு சிங்கே அணி­வ­குப்பு முதன்­மு­றை­யாக மின்­னி­லக்க முறை­யில் நேற்று முன்­தி­னம் அரங்­கேற்­றப்­பட்­டது. தனது 49வது ஆண்­டில் அடி­யெ­டுத்து வைத்­துள்ள அணி­வ­குப்­பின் இவ்­வாண்­டிற்­கான கருப்­பொருள் ‘நம்­பிக்கை ஒளி’.

இந்த நிகழ்வுகளை சிங்­கப்­பூ­ர் மற்றும் உல­கம் முழு­வ­தும் உள்ள பல நாடு­களில் இருந்து 150 அமைப்­பு­க­ளைச் சேர்ந்த ஏறக்­கு­றைய 2,000 பேர் படைத்­த­னர்.

லத்­தீன், ‘ஹிப்-ஹாப்’ உள்­ளிட்ட பல்­வேறு நடன பாணி­களில் சிறந்து விளங்­கும் 18 உள்­ளூர் நட­னக் குழுக்­க­ளைச் சேர்ந்த கலை­ஞர்­கள் பங்கேற்றனர். சிங்­கப்­பூ­ரின் உண­வகங்­காடி கலா­சா­ரத்­தைக் கொண்­டா­டும் படைப்­பும் அணி­வ­குப்­பில் இடம்­பெற்­றது.

கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் சிங்­கப்­பூ­ருக்கு ஆத­ர­வ­ளிக்­கும் வித­மாக 500க்கும் அதி­க­மான குடி­யி­ருப்­பா­ளர்­கள் பாடல் பாடி­னர்.

மீடி­யா­கார்ப் அரங்­கில் நடை­பெற்ற சிங்கே அணி­வ­குப்­பில் பிர­தமர் லீ சியன் லூங்கும் அவ­ரது துணை­வி­யார் திரு­வாட்டி ஹோ சிங்­கும் கலந்­து­கொண்­ட­னர்.

இது­கு­றித்து தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்ட பிர­த­மர் லீ, “பெரிய அள­வி­லான ஒன்­று­கூ­டல்­களை கொவிட்-19 முடி­வுக்­குக் கொண்டு வரு­வ­தற்­கு­முன் இங்கு நடத்­தப்­பட்ட கடைசி பெரிய நிகழ்ச்சி­களில் ஒன்று சிங்கே அணி­வகுப்பு 2020.

“ஓராண்டு கழித்­தும் வழக்­க­மான சிங்கே அணி­வ­குப்பை நம்­மால் நடத்த முடி­ய­வில்லை. எனி­னும், புதிய முறை­களை நடத்­திப் பார்க்க தடங்­க­லும் வாய்ப்­பு­க­ளாக அமை­ய­லாம்.

“மீடி­யா­கார்ப் அரங்­கில் சிங்கே 2021ஐ பார்த்த 150 விருந்­தி­னர்­களில் நானும் ஒரு­வர். மேலும் பலர் தொலைக்­காட்சி அல்­லது இணை­யம் வழி­யாக நிகழ்ச்­சி­யைக் கண்டு களித்­த­னர்,” என்று கூறி­னார்.

சிங்கே அணி­வ­குப்பு மீடி­யா­கார்ப் ஒளி­வ­ழி­கள் 5 மற்­றும் 8லும் சிங்கே இணை­யப்­பக்­கத்­தி­லும் ஒளி­ப­ரப்­பப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!