எட்டு மாடி பண்ணை; மீன் உற்பத்தியில் புதிய உத்தி

முதற்கட்டமாக ஆண்டுக்கு 1,000 டன்; 2023ல் 2,700 டன் மீன் உற்பத்தி செய்யும் சிங்­கப்­பூ­ரில் எட்டு மாடி மீன் பண்ணை இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் செயல்­ப­டத் தொடங்­கும். அதுவே சிங்­கப்­பூ­ரி­லும் இந்த வட்­டா­ரத்­தி­லும் ஆக உய­ர­மான மீன் பண்­ணை­யாக இருக்­கும்.

லிம் சூ காங்­கில் ‘அப்­பல்லோ அக்­வா­கல்­சர் குரூப்’ என்ற உள்ளூர் மீன் பண்ணை நிறு­வ­னம் அந்த எட்டு மாடி மீன் பண்­ணை­யைத் திறந்து இருக்­கிறது.

தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­படுத்தி உற்­பத்­தி­யைப் பெருக்க வேண்­டும் என்று விவ­சா­யி­களை அர­சாங்­கம் ஊக்­கு­வித்து வரும் நிலை­யில் அந்த மீன் பண்ணை செய­லில் இறங்­கு­கிறது. துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், பிப்­ர­வரி 16ஆம் தேதி வேளாண்-உணவு குழும உரு­மாற்ற நிதி என்ற ஒரு நிதி ஏற்­ப­டுத்­தப்­பட்டு அதற்கு $60 மில்­லி­யன் ஒதுக்­கப்­படும் என்று அறி­விப்பு விடுத்­தார். அந்த நிதி, பண்ணை உரிமை யாளர்கள் புதுப்­புது தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­ப­டுத்தி உற்­பத்­தியைப் பெருக்க உத­வும். இதன் விவ­ரங்­கள் பிறகு அறி­விக்­கப்­படும்.

சிங்­கப்­பூர் தன்­னு­டைய உணவு தேவை­யில் 30 விழுக்­காட்டை 2030ஆம் ஆண்டு வாக்­கில் உள்­ளூர் உற்­பத்தி மூலம் ஈடு­செய்­ய இலக்கு நிர்­ண­யித்து இருக்­கிறது.

புதிய எட்டு மாடி மீன் பண்ணை­யின் முதல் கட்­டத்­தில் மூன்று மாடி­கள் உள்­ள­டங்கி இருக்­கும் என்­றும் ஆண்­டுக்கு 1,000 டன் வரை மீன் உற்­பத்தி செய்­யப்­படும் என்­றும் அப்­பல்லோ குரூப் நிறு­வ­னத்­தின் அனைத்­து­லக மற்­றும் நிறு­வன மேம்­பாட்டு மூத்த இயக்கு­நர் லக்கி புவா தெரி­வித்­தார்.

எட்டு மாடி பண்­ணை­யும் 2023ல் செயல்­படும்போது ஆண்­டுக்கு 2,700 டன் மீன் உற்­பத்­தி­யா­கும்.

சிங்­கப்­பூ­ரில் 2019ல் ஏறத்­தாழ 4,707 டன் மீன்­கள் உற்­பத்தி செய்­யப்­பட்­டன என்­றும் அவர் குறிப்­பிட்­டார். இந்த நிறு­வ­னம் $65 மில்­லி­யன் செல­வில் அமைத்து இருக்­கும் அடுக்­கு­மாடி மீன் பண்ணை நியோ டியோ கிர­செண்ட் பகு­தி­யில் நீல நிறத்­தில் ஆக உயர கட்­ட­ட­மா­கக் காணப்­ப­டு­கிறது. அந்த இடம் சிங்­கப்­பூ­ரில் எந்த ஒரு தொழிற்பேட்டை­யிலும் காணப்­ப­டாத கிரா­மி­யப் பகுதி­யாக இருக்­கிறது.

உள்­ளூர் உற்­பத்தி பெருக பெருக விலையும் குறை­யும் என்­றார் திரு புவா.

இத­னி­டையே, அடுக்­கு­மாடி மீன் பண்ணை உத்தி பற்றி கருத்து கூறிய ரிபப்­ளிக் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் வேளாண் ஆய்வு, புத்­தாக்க நிலைய மூத்த நிர்­வாகி டாக்­டர் ரிட்டு பல்லா, அப்­பல்லோ நிறு­வ­னம் இப்­போது கைக்­கொள்­ளும் அடுக்­கு­மாடி மீன் பண்ணை போன்ற ஏற்­பா­டு­கள்­தான் எதிர்­காலத்­தில் நமக்­கு­ரிய வழி­யாக இருக்­கும் என்று கருத்து கூறி­னார்.

இத­னி­டையே, உள்­ளூர் உணவு உற்­பத்­தி­யைப் பெருக்­கு­வ­தற்குப் பல்­வேறு செயல்­திட்­டங்­க­ளைத் தான் கொண்­டி­ருப்­ப­தாக சிங்­கப்­பூர் உணவு அமைப்பு தெரி­வித்­தது.

இந்த ஆண்­டின் இரண்­டாம் பாதி­யில் இந்த அமைப்பு இரண்டு முன்­னோடித் திட்­டங்­க­ளைச் சோதித்துப் பார்க்­கும்.

உள்­ளூ­ரில் உற்­பத்­தி­யா­கும் உண­வுப்­பொ­ருட்­க­ளைச் சாப்­பி­டு­வதால் ஏற்­ப­டக்­கூ­டிய நன்­மை­களைப் புதிய தாய்­மார்­க­ளுக்கு எடுத்­துக்­காட்டி விளக்­கு­வது அந்­தத் திட்­டங்­களில் ஒன்று.

ஈரச்­சந்­தை­களில் உள்­ளூர் உற்­பத்­திப் பொருட்­களை மக்­கள் எளி­தாக அடை­யா­ளம் காண கண்­க­வர் விளம்பரங்களை இடம்­பெ­றச்­செய்வது மற்­றொரு செயல்­திட்­டம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!