பதின்ம வயதினருக்கு வலைவிரிக்கும் பயங்கரவாதிகள்

சிங்­கப்­பூ­ரில் பயங்­க­ர­வாத காரி­யங்­கள் தொடர்­பில் 2015 முதல் உள்­நாட்­டுப் பாது­காப்­புத் துறை தடுத்து வைத்த 53 பேரில் ஏழு பேர் 16க்கும் 19க்கும் இடைப்­பட்ட வய­துள்­ள­வர்­கள். அவர்­கள் அனை­வ­ருமே இணை­யம் மூலம் தீவிர மனப்­போக்கை வளர்த்­துக்­கொண்­ட­வர்­கள்.

அந்த ஏழு பேரில் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் பயங்­க­ர­வா­தி­கள் தங்­கள் வலைக்­குள் கொண்­டுவர அவர்­க­ளின் இளம் வயதே கார­ண­ம் என்று வல்­லு­நர்­கள் கூறுகிறார்கள்.

அத்­த­கைய தீவி­ர­வா­தி­கள் இணை­யப் போக்­கு­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு இணை­யத்­தில் தலை­தூக்­கும் டிக்­டாக், இன்ஸ்­ட­கி­ராம் போன்ற புதிய தளங்­க­ளை­யும் பயன்­ப­டுத்­திக்­கொண்டு தங்­க­ளு­டைய சித்­தாந்­தங்­களை இளை­யர்­க­ளி­டம் பரப்­பும் உத்­தியைக் கடைப்­பி­டித்து வரு­கி­றார்­கள் என்று வல்­லு­நர்­கள் கரு­து­கி­றார்­கள்.

அதே­வே­ளை­யில், ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்பு பல மொழி­களில் பிர­சா­ரங்­களை உருவாக்க பல குழுக்­க­ளைக் கொண்­டுள்ளது.

ராணுவ ரீதி­யில் தோல்­வி­ய­டைந்­து­விட்ட அந்த இயக்­கம் இப்­போது சித்­தாந்த போராட்­டத்­தில் ஈடு­பட்டுள்ளதாக சமய மறு­வாழ்­வுக் குழு­ என்ற அமைப்­பின் துணைத் தலை­வர் டாக்­டர் முகம்­மது அலி தெரி­விக்­கி­றார்.

“இளை­யர்­கள் எளி­தில் வளை­யக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள். தங்­களை எதிர்­நோக்கி இருப்­ப­வற்றைப் பற்றி அவர்­கள் உணர்­வ­தில்லை. அத்­தகைய குழுக்­க­ளுக்கு உதவி அவற்­றைப் பாது­காக்­கும் கதா­நா­ய­கர்­க­ளா­கத் திகழ வேண்­டும் என்ற எண்­ணம் அவர்­க­ளுக்குக் கவர்ச்­சி­யாக உள்ளது.

“இது தாங்­கள் ஒரு கன­வில் இருப்­ப­தாக அவர்­களை நம்­பச் செய்­கிறது,” என்று 20 ஆண்­டு­க­ளுக்­கும் அதிக காலம் பதின்ம வய­தி­ன­ருக்கு ஆலோ­சனை கூறி வரும் மருந்­தக மனோ­வி­யல் வல்­லு­நர் டாக்­டர் பால்­ஹெட்­செட் தெரி­வித்­தார்.

இளை­யர்­கள் பயங்­க­ர­வா­தி­க­ளின் வலை­யில் சிக்­கு­வதை தடுப்­ப­தற்­கான போராட்­டம் வெற்­றி­க­ர­மான முறை­யில் இடம்­பெ­று­வ­தற்­குச் சிறந்த வாய்ப்பு இல்­லா­மல் இல்லை.

இங்­குள்ள இளை­யர்­கள் உள்­ளிட்ட மக்­கள் அனை­வ­ரும் சரி­யான போத­னை­க­ளைப் புரிந்­து­கொண்டு தீவி­ர­வாத கண்­ணோட்­டங்­களில் சிக்­கா­மல் நடந்­து­கொள்­வ­து­தான் இதில் தலை­சி­றந்த தற்­காப்பு என்று உள்­துறை துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் சென்ற வாரம் நாடா­ளு­மன்­றத்­தில் கூறினார்.

பள்­ளிக்­கூ­டங்­க­ளைப் பொறுத்தவரை­ மாண­வர்­க­ளோ­டும் சமூ­கத்­தோ­டும் சேர்ந்து செயல்­பட்டு மாண­வர்­களின் மன­தில் நன்­னெ­றி­க­ளை ஆசி­ரி­யர்­கள் பதிக்கிறார்­கள்.

தீவி­ர­வா­தி­க­ளின் பிர­சார வலை­யில் சிக்­கக்­கூ­டிய வாய்ப்பு உள்­ள­வர்­களை முன்­கூட்­டியே கண்­ட­றிந்து அத்­த­கைய மாண­வர்­களுக்கு உதவி கிடைப்­பதை அவர்­கள் உறு­திப்­ப­டுத்­து­கி­றார்­கள்.

இதில் நற்­குணம் குடி­யியல் கல்வியும் போன்ற பாடத்­திட்ட முயற்­சி­களும் உறு­து­ணை­யாக இருக்­கின்­றன. ஆலோ­ச­னை­யா­ளர்­களும் முக்­கிய பணி­யாற்­று­கி­றார்­கள். பள்ளி ஆலோ­ ச­னை­யா­ளர்­க­ளுக்கு 2016 முதல் உள்­துறை அமைச்சு பயி­ல­ரங்­கு­களை நடத்தி வரு­கிறது.

இளை­யர்­கள் தீவி­ர­வா­தி­க­ளின் உத்­தி­களில் சிக்­கா­மல் தடுப்­ப­தற்­கான இத்­த­கைய முயற்­சி­கள் சக மாண­வர்­க­ளின் ஆக்­க­க­ர­மான செல்­வாக்­கு­டன் சேர­வேண்டுமென வல்­லு­நர்­கள் தெரி­விக்­கி­றார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!