சிறுவயது அனுபவம் வகுத்த லட்சியப் பாதை

சிறுவயது அனுபவம் வகுத்த லட்சியப் பாதை

1 mins read
6ecb3ed8-c7d5-43e6-aca6-7b3c5d18433d
குழந்தைநல மருத்துவ நிபுணராக விரும்பும் மனிஷ் வாரியர். படம்: தமிழ் முரசு -

10 வய­தில் மார்­ப­கப் புற்­று­நோ­யால் அவ­திப்­பட்­டுக்­கொண்­டி­ருந்த தமது பாட்­டிக்­குத் துணை­யாக மருத்­து­வ­ம­னைக்கு அடிக்­கடி சென்று வந்த மனிஷ், அங்கு பாட்­டிக்கு கனி­வு­ட­னும் பொறு­மை­யு­ட­னும் சிகிச்சை அளித்த மருத்­து­வர்­க­ளைக் கண்டு வியந்­தார்.

ஒவ்­வொரு தட­வை­யும் முகம் சுளிக்­கா­மல் பொறு­மை­யாக விவ­ரத்தைக் கூறி பாட்டி எந்த கட்­டத்­தி­லும் பயமோ சங்­க­டமோ கொள்­ளா­மல் கவ­னித்­துக்­கொண்ட அந்த மருத்­து­வர்­களைப் போல் தாமும் ஆக வேண்­டும் என்று அந்த பிஞ்சு வய­தில் மனிஷ் வாரி­யர் முடி­வெ­டுத்­தார்.

உயர்­நி­லைப் பள்­ளிக்கு சென்று இணை­யத்­தைப் பயன்­படுத்தி மருத்­து­வத் துறையைப் பற்­றி­யும் மருத்­து­வ­ரா­வ­தற்கு என்­ன­வெல்­லாம் செய்ய வேண்­டும் என்­ப­தைப் பற்­றி­யும் படிப்­படி­யா­கத் தெரிந்­து­கொண்­டார்.

ராஃபிள்ஸ் கல்வி நிலையத் தில் பயி­லும் இவர், 2018ஆம் ஆண்டு 'ரெயின்போ சென்­டர்' என்­னும் அமைப்­பின் வழி குறை­பா­டுள்ள பிள்­ளை­க­ளுக்கு உத­வும் சமூகப் பணி­யில் இறங்­கி­னார்.

"இந்த குழந்­தை­களைக் குறை­பா­டு­டை­ய­வர்­கள் என்று நினைப்­பதைத் தவிர்த்­து­ இவர்­களும் பிற குழந்­தை­கள்போலத்­தான் என்ற பார்­வை­யில் பார்க்க வேண்­டும். இவர்­க­ளுக்­கும் அதே ஆசை, அதே உணர்ச்­சி­கள்­தான் என்று அந்த இடத்­தில் இருந்த ஒரு தொண்­டூ­ழி­யர் என்­னி­டம் கூறி­னார். அது என்­னால் மறக்­க­மு­டி­யாத ஒன்று," என்று குழந்தை மருத்­து­வ­ராக விரும்­பும் மனிஷ் கூறி­னார்.

'ஏ' நிலை தேர்வு முடிந்து தற் போது தேசிய சேவை ஆற்றிவரும் மனிஷ், கடந்த ஆண்டு நண்­பர் ஒரு­வ­ரு­டன் இணைந்து வசதி குறைந்த பிள்­ளை­க­ளுக்கு இல­வ­ச­மாக தொழில்­நுட்பக் குறி­யீ­டு­கள் பற்­றிய வகுப்­பு­கள் நடத்­தும் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.