ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் உச்சநேரத்தில் 10 வாகன விபத்து

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் உச்சநேரத்தில் 10 வாகன விபத்து

1 mins read
038e04aa-4321-4bde-a992-6f36bddf2406
ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் இன்று காலை உச்சநேரத்தின்போது 10 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து நிகழ்ந்தது. அதில் மூவர் காயமடைந்தனர்.  படம்: சாவ் பாவ் வாசகர் -

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் இன்று காலை உச்சநேரத்தின்போது 10 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து நிகழ்ந்தது. அதில் மூவர் காயமடைந்தனர்.

சாங்கி விமான நிலையம் நோக்கிச் செல்லும் வழியில், மரின் விஸ்தா புறவழிச்சாலை அருகே காலை 9.25 மணிக்கு அந்த விபத்து நிகழ்ந்தது.

காயமடைந்தவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

விபத்தில் சிக்கிய பெரும்பாலான வாகனங்களுக்கு அவ்வளவாக சேதம் இல்லை என்று நேரே பார்த்தவர்கள் கூறியதாக வான் பாவ் செய்தித்தாள் குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல வழிகளிலும் உதவ ஏறத்தாழ 15 பேர் முயன்றனர்.

விபத்து நிகழ்ந்த போது அந்தப் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் பலரும் கூட்டமாக நின்றதைப் பார்க்க முடிந்தது.

குறிப்புச் சொற்கள்