பொங்கோலில் காட்டுப் பன்றி தாக்கியதில் இருவருக்குக் காயம்

பொங்­கோ­லில் கடந்த சனிக்­கி­ழமை நிகழ்ந்த இரு வெவ்­வேறு சம்­ப­வங்­களில் காட்­டுப் பன்றி தாக்கி இரு­வ­ருக்­குக் காயம் ஏற்­பட்­டது.

பொங்­கோல் வாக், புளோக் 308Bல் இரவு 9.10 மணிக்கு முத­லா­வது சம்­ப­வம், புளோக் 310Aல் இரவு 9.30 மணிக்கு இரண்­டா­வது சம்­ப­வம் என இருமுறை சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக்கு அழைப்­பு­கள் வந்­தன.

தாக்­கு­த­லில் காய­முற்ற இரு­வ­ரும் செங்­காங் பொது மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

லியன்ஹ வான் பாவ் சீன நாளி­த­ழ் செய்­தி­யின்­படி, முதல் காட்­டுப் பன்­றித் தாக்­கு­தல் புளோக் 310Aக்குக் கீழ் நடந்­தது. அங்கு ஒரு பெண்­ணைக் காட்­டுப் பன்றி கடித்து அவரை சுமார் ஒரு மீட்­ட­ருக்­குத் தொலை­வுக்கு இழுத்­துச் சென்­றது.

சம்­ப­வத்தை நேரில் பார்த்த மற்­றொ­ரு­வர் வான் பாவ் நாளி­த­ழி­டம் பேசி­னார். அதில் அவர் ஒரு பெண் உத­விக்­காக அழு­வ­தைக் கேட்­ட­வு­டன் போலிசை அழைத்­த­தா­கக் கூறி­னார்.

மற்­றொரு குடி­யி­ருப்­பா­ளர் தனது குடை­யைக் கொண்டு அந்­தக் காட்­டுப் பன்­றியை அடித்­தார். அங்கு வந்த உணவு விநி­யோக ஊழி­யர், பன்­றிக்­குப் பயத்தை ஏற்­ப­டுத்த தனது சைக்­கிள் மணி­யைத் தொடர்ந்து ஒலிக்­கச் செய்­தார்.

இச்­சம்­ப­வங்­கள் குறித்து நேற்று முன்­தி­னம் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் கருத்­து­ரைத்த பொங்­கோல் வெஸ்ட் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­வாட்டி சுன் சூலிங், தாக்­கு­த­லில் காயம்­பட்ட இரு­வர் விரை­வில் குண­ம­டைய வாழ்த்து தெரி­வித்­தார்.

“தேசிய பூங்­காக் கழ­கத்­து­டனும் சிங்­கப்­பூர் போலிஸ் படை­யு­ட­னும் நான் சனிக்­கி­ழமை முதல் தொடர்­பில் இருக்­கி­றேன். காட்­டுப் பன்றி தாக்­கு­தல் குறித்து அந்த அமைப்பு­கள் எனக்­குத் தகவல் அளித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன.

“தாக்­கு­தல் நடத்­திய காட்­டுப் பன்­றி­யைத் தேடும் பணி­யில் 20 ஆட­வர்­கள் ஈடு­பட்­டுள்­ள­னர். மற்ற குடி­யி­ருப்­பா­ளர்­களை அந்­தப் பன்றி தாக்காமல் தடுக்­கும் நோக்­கத்­தில் தேடும் நட­வ­டிக்கை முடுக்கி விடப்­பட்­டுள்ளது.

“காட்­டுப் பன்­றியை எதிர்­கொண்­டால் என்ன செய்­ய­லாம் என்­ப­தைத் தெரி­விக்­கும் அறி­விப்­புப் பல­கை­களை நீர்­மு­கப்பு நெடு­கி­லும் தேசிய பூங்­காக் கழ­கம் வைத்­துள்­ளது,” என்­றும் திரு­வாட்டி சுன் கூறினார்.

காட்­டுப் பன்­றியை எதிர்­கொண்­டால், அமை­தி­யாக இருக்­கும்­ப­டி­யும் உடனே அங்­கி­ருந்து மெது­வாக சென்­று­வி­டு­மா­றும் பொது­மக்­க­ளுக்­குக் கூறும் ஆலோ­ச­னையை தேசிய பூங்­காக் கழ­கம் தனது இணை­யப் பக்­கத்­தில் தெரி­வித்­துள்­ளது.

அவற்­றுக்கு உண­வ­ளிப்­பதை, சின­மூட்­டு­வதை, அதனை புகைப்­படம் எடுப்­ப­தைத் தவிர்க்­கு­மாறு ஆலோ­சனை கூறப்­ப­டு­கிறது.

குறிப்பாக, தனது குட்டிகளுடன் உள்ள பன்றிகள் அவற்றைப் பாதுகாக்க மூர்க்கமாக நடந்து கொள்ள நேரிடலாம் என்றும் அவற்றைத் தனியாக விட்டுவிடவும் என்றும் கழகம் கூறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!