சைக்கிளோட்டப் பாதைகளுக்காக சாலையோர வாகன நிறுத்துமிடங்களை அகற்ற பரிசீலனை

சைக்கிளோட்டப் பாதைகளுக்காக சாலையோர வாகன நிறுத்துமிடங்களை அகற்ற பரிசீலனை

2 mins read
729a6c55-2e7e-47a0-8a8e-8d8c30cf9eb2
சைக்­கி­ளோட்டப் பாதைகளை அமைக்க இடமில்லை என்றால் சாலை­யோ­ர வாக­ன­நி­றுத்­து­மி­டங்­களை அகற்­ற­ ஏலக் குத்தகை விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அடுத்த பத்­தாண்­டுக்­குள் தை செங் பகு­தி­யின் சில இடங்­களில் உள்ள சாலை­யோர வாகன நிறுத்­து­மி­டங்­களை அகற்றி, அங்கு சைக்­கி­ளோட்டப் பாதை­களை அமைக்­கும் யோசனை பற்றி நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் பரி­சீ­லித்து வரு­கிறது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜூ செங் ரோடு, மெக்­ட­காட் ரோடு, கிம் சுவான் ரோடு, தை செங் அவென்யூ ஆகி­ய­வற்­றில் உள்ள வாக­ன­ நி­றுத்­து­மி­டங்­களை அகற்­றும் உத்­தேச திட்­டத்­தைத் தவிர மெக்­ட­காட் ரோடு, கிம் சுவான் ரோடு, தை செங் அவென்யூ ஆகிய சாலை­களில் உள்ள தடங்­களில் ஒன்றை அகற்­று­வது பற்­றி­யும் ஆணை­யம் பரி­சீ­லித்து வரு­கிறது. ஜூ செங் ரோட்­டில் உள்ள சாலைத் தடங்­க­ளின் குறுக்­க­ளவு குறைக்­கப்­படும் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்த்த ஏலக் குத்­தகை ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

சாலை­யோ­ரப் பகுதி, நடை­பாதை, சைக்­கி­ளோட்டப் பாதை ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கக்­கூ­டிய வகை­யில் பெரி­தாக இல்லை என்­றால், சாலை­யோ­ரத்­தில் உள்ள வாக­ன­நி­றுத்­து­மி­டங்­களை அகற்­ற­வும் அவர்­கள் பரிந்­து­ரைக்­க­லாம் என்று அந்த ஆவ­ணங்­கள் தெரி­வித்­தன.

மேற்­கு­றிப்­பிட்ட பகு­தி­க­ளைத் தவிர, கோவன் எம்­ஆர்டி நிலை­யத்­துக்கு அரு­கில் உள்ள இயோ சூ காங், அப்­பர் சிராங்­கூன் ரோடு ஆகி­ய­வற்­றில் உள்ள வாக­ன­ நிறுத்து­மி­டங்­களை அகற்றி அங்கு சைக்­கிள்­களை நிறுத்தி வைக்­கும் அடுக்­கு­களை உரு­வாக்­கும் சாத்­தி­யம் பற்றி ஆரா­யும்­ப­டி­யும் குத்­தகை­தா­ரர்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அந்த இரு பகு­தி­களில் கார்­களை நிறுத்த மொத்­தம் 132 இடங்­களும் மோட்­டார்­சைக்­கிள்­களை நிறுத்த 10 இடங்­களும் உள்­ளன. அவற்­றுக்­குப் பதி­லாக அங்கு 124 சைக்­கிள் நிறுத்­தும் இடங்­களை அமைக்க பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கிறது என்­றும் ஆணை­யம் கூறி­யது.

இது குறித்து கருத்­து­ரைத்த சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் போக்­கு­வ­ரத்து உள்­கட்­ட­மைப்பு நிபு­ணர் திரு ரேமண்ட் ஓங், "உந்து நட­மாட்­டத்­துக்குச் சாத­க­மாக சாலையை மீட்­டெ­டுத்­தல், அமெ­ரிக்­கா­வின் போர்ட்­லண்ட், கன­டா­வின் கேல்­கரி ஆகிய இடங்­களில் பிரபலமாகி வருகிறது," என்பதைச் சுட்டினார்.