நீக்குப்போக்கான கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் எம்1

தொலைத்தொடர்புச் சேவைகளை வழங்கும் எம்1 நிறுவனம் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தேர்ந்து எடுத்துக்கொள்ளும் வகையில் அதிக நீக்குப்போக்குடன் கூடிய புதிய கைபேசிக் கட்டணத் திட்டங்களை நடப்புக்குக் கொண்டு வந்துள்ளது.

அத்தகைய புதிய 3 திட்டங்களில் தங்கள் விருப்பதிற்கேற்ப இணையப் பயன்பாட்டு அளவையும் உரையாடல் நேரத்தையும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மாதம் $15.95 செலுத்தக் கூடிய திட்டமும் இருக்கிறது.

இந்தத் திட்டங்கள் முந்தைய திட்டங்களுக்கு மாற்றாக இடம்பெறுகின்றன. திட்டங்களின் ஒரு பகுதியாக தாங்கள் பெறுகின்ற கையடக்கச் சாதனங்களுக்குத் தாங்கள் முதலில் செலுத்த விரும்பும் தொகையையும் எவ்வளவு காலத்திற்கு மீதம் உள்ள கட்டணத்தைச் செலுத்த விரும்புகிறார்கள் என்பதையும் பயனீட்டாளர்கள் முடிவு செய்துகொள்ளலாம். நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் புதிய திட்டங்கள் பற்றி எம்1 அறிவித்தது.

புதிய கட்டணத் திட்டங்களைப் பார்க்கையில், அவை போட்டித்திறன் மிக்கவையாக இருக்கின்றன என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஒரு மாதம் $24.95 செலுத்தினால் 100 நிமிடங்கள் பேசிக்கொள்ளலாம். 30 ஜிபி இணையத்தைப் பயன்படுத்த திட்டம் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!