கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மார்பகப் பரிசோதனையைத் தள்ளிப்போட ஆலோசனை

கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மார்பகப் பரிசோதனையைத் தள்ளிப்போட ஆலோசனை

2 mins read
f9c73b6f-f50d-4b78-a35d-a5cde8179fa8
கொவிட்-19 தடுப்­பூசி கார­ண­மாக நிண­நீர்க் கட்­டி­கள் வீக்­க­மடை­யக்­கூ­டிய வாய்ப்பு இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது. இவை மார்­ப­கப் பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வ­ரும்­போது அவற்றைப் புற்­று­நோய்க்­கான அறிகுறி என்று மருத்­து­வர்­கள் தவறாக முடிவு செய்­து­வி­டக்­கூ­டிய வாய்ப்பு இருக்­கிறது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அண்­மை­யில் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பெண்­கள் தங்­க­ளு­டைய வரு­டாந்­திர மார்­ப­கப் புற்­று­நோய் பரி­சோ­தனை தேதியை மாற்றி அமைத்­துக்­கொள்­ளும்­படி ஆலோ­சனை கூறப்­பட்டு உள்­ளது.

கொவிட்-19 தடுப்­பூசி கார­ண­மாக நிண­நீர்க் கட்­டி­கள் வீக்­க­மடை­யக்­கூ­டிய வாய்ப்பு இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது. இவை மார்­ப­கப் பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வ­ரும்­போது அவற்றைப் புற்­று­நோய்க்­கான அறிகுறி என்று மருத்­து­வர்­கள் தவறாக முடிவு செய்­து­வி­டக்­கூ­டிய வாய்ப்பு இருக்­கிறது.

ஆகை­யால் கொவிட்-19 தடுப்­பூ­சிக்கு முன்­ன­தாக அல்­லது இரண்­டா­வது தடுப்­பூசி போடப்­பட்­ட­தற்­குப் பிறகு ஒரு சில வாரங்­கள் கழித்து மார்­ப­கப் பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­ப­டு­வ­தற்­குத் தோதாக ஏற்­பாடு­களைச் செய்­து­ தரும்படி மருத்து­வர்­க­ளுக்கு ஆலோ­சனை கூறப்­பட்டு இருக்­கிறது.

ஃபைசர்-பயோ­என்­டெக் தடுப்­பூசி கார­ண­மாக கழுத்­தி­லும் கைகளி­லும் நிண­நீர்க் கட்­டி­கள் வீங்­கக்­கூ­டிய ஆபத்து இருக்­கிறது. என்­றா­லும் அந்த வீக்­கம் ஒரு வார காலத்­தில் மறைந்­து­வி­டும் என்று சுகா­தார அமைச்சு தெரி­விக்கிறது.

கொவிட்-19 தடுப்­பூசி கார­ண­மாக அந்த ஊசி போடப்­படும் கையில் நிண­நீர்க் கட்­டி­கள் தடித்து­வி­டக்­கூ­டிய வாய்ப்பு உண்டு.

இதைப் புற்­று­நோயின் தொடக்­கம் என்று தவ­றாக மருத்­து­வர்­கள் அடை­யா­ளம் கண்­டு­வி­டக்­கூ­டிய வாய்ப்பும் உள்ளது என்று மவுண்ட் எலி­ச­பெத் மருத்­து­வ­ம­னை­யின் மார்­பக அறு­வை­சி­கிச்சை வல்­லு­நர் டாக்­டர் டான் யா யுயன் கூறினார்.

கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட இரண்டு சுகா­தார பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­கள் மார்­ப­கப் புற்­று­நோய் மற்­றும் புற­ஒலி மருத்­துவ பரி­சோ­த­னை­க­ளைச் செய்­து­கொண்­டார்­கள். அவர்­கள் இரு­வ­ருக்­குமே ஊசி போடப்­பட்ட கையில் நிண­நீர்க் கட்­டி­கள் தடித்து இருந்­தது தெரி­ய­வந்­தது.

அவர்­க­ளின் மார்­ப­கத்­தில் இதர புற்­று­நோய்க்­கான சந்­தேக அறி­குறி­கள் எது­வும் காணப்­ப­ட­வில்லை. ஆகை­யால் அவர்­க­ளுக்குத் திரும்­ப­வும் புற­ஒலி மருத்­துவப் பரி­சோதனை நடத்­தப்­படும் என்று அந்த மருத்­து­வர் தெரி­வித்­தார்.

பரி­சோ­தனை தேதியை மாற்­றிக்­கொள்­ளும்­படி அண்­மை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட மற்­ற­வர்­கள் அனை­வருக்­கும் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் டாக்­டர் டான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்