50,000 தனியார் வாடகை கார், டாக்சி ஓட்டுநர்களுக்குத் தடுப்பூசி

தற்­போது பணி­யில் உள்ள 50,000க்கும் மேற்­பட்ட டாக்சி மற்­றும் தனி­யார் வாடகை கார் ஓட்டு­நர்­க­ளுக்­கான தடுப்­பூசி போடும் திட்­டம் நேற்று தொடங்­கி­யது.

அவர்­கள் அனை­வ­ரும் இவ்­வார இறு­திக்­குள் தங்­க­ளது முத­லா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வர்.முன்­கள நிலப் போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போட்டு அவர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து பாது­காப்பு கொடுக்­கும் முயற்சி­யின் ஒரு பகு­தி­யாக இது மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

முன்­னாள் ஹோங் கா உயர்­நிலைப் பள்­ளி­யில் செயல்­படும் தடுப்­பூசி நிலை­யத்­தில் நேற்று சுமார் 300 ஓட்­டு­நர்­கள் தங்­கள் முத­லா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­னர்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ளத் தகுதி­யு­டைய ஓட்­டு­நர்­கள் அதற்­கான அழைப்­பைப் படிப்­ப­டி­யா­கக் குறுஞ்­செய்தி மூலம் பெறு­வார்­கள். பின்­னர் அவர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தங்­க­ளுக்கு ஏற்­பு­டைய நாளை­யும் நேரத்­தை­யும் உறுதி செய்­து­கொள்­ள­லாம்.

இந்த ஓட்­டு­நர்­கள் தங்­கள் தடுப்­பூ­சியை 14 தடுப்­பூசி நிலை­யங்­கள், 20 பல­துறை மருந்­த­கங்­கள், தற்­போது தீவெங்­கும் தடுப்­பூசி நிலை­யங்­க­ளா­கச் செயல்­படும் 22 பொதுச் சுகா­தா­ரத் தயார்­நிலை மருந்­த­கங்­கள் ஆகி­ய­வற்­றில் போட்­டுக்­கொள்­ள­லாம்.

கடந்த மாதம் விமா­னத்­துறை, கடல்­துறை, பொதுப் போக்­கு­வ­ரத்­துத் துறை ஆகி­ய­வற்­றில் ஊழி­யர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப் பட்டது. இப்­போது டாக்சி, தனி­யார் வாடகை கார் ஒட்­டு­நர்­க­ளுக்­கான தடுப்­பூசி போடு­தல் தொடங்­கி­யுள்­ளது.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம், சுகா­தார அமைச்சு ஆகி­ய­வற்­றின் ஏற்­பாட்­டி­லும் தேசிய டாக்சி சங்­கம், தேசிய தனி­யார் வாடகை வாக­னங்­கள் சங்­கம் ஆகி­ய­வற்­றின் ஆத­ர­வா­லும் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

நேற்று ஹோங் கா உயர்­நி­லைப் பள்­ளி­யில் செயல்­படும் தடுப்­பூசி நிலை­யத்­திற்கு வருகை புரிந்த போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர், தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள அழைப்பு கிடைக்­கும் ஓட்­டு­நர்­கள் அதைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று வலு­வான வேண்­டு­கோள் விடுத்­தார்.

“உங்­க­ளை­யும் உங்­கள் குடும்­பத்­தா­ரை­யும் உங்­கள் சமூ­கத்­தை­யும் பாது­காக்க தடுப்­பூசி பெருந்­துணை புரி­கிறது. அதைப் போட்­டுக்­கொள்­வதால் உங்­க­ளுக்கு மன­அ­மைதி கிடைக்­கும். உங்­கள் மீது உங்­கள் பய­ணி­கள் கூடு­தல் நம்­பிக்கை வைப்­பார்­கள்,” என்­றார் டாக்­டர் கோர்.

டாக்சி, தனி­யார் வாடகை கார் நடத்­து­நர்­கள், தேசிய டாக்சி சங்­கம், தேசிய தனி­யார் வாடகை வாக­னங்­கள் சங்­கம் ஆகி­ய­வற்­றின் ஆத­ர­வுக்கு அமைச்­சர் கோர் தமது நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.

டாக்சி மற்­றும் தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­கள் உட்­பட 80,000க்கும் மேற்­பட்ட நிலப் போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் ஒட்­டு­மொத்­தத் திட்­டம் பற்­றிய தக­வ­லை­யும் அமைச்­சர் வெளி­யிட்­டார். இம்­மா­தம் 14ஆம் தேதி வரை, பொதுப் போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­களாக உள்ள 14,000க்கு மேற்­பட்ட பேருந்து, ரயில் ஓட்­டு­நர்­கள் தங்­கள் முத­லா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

அவர்­களில் 10,000க்கு மேற்­பட்­டோர் தங்­கள் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யை­யும் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர் என்று தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!