24 மணிநேர குடும்ப வன்முறை உதவி அழைப்பு சேவை தொடக்கம்

பொது­மக்­கள் குடும்ப வன்­முறை மற்­றும் கொடு­மைப்­ப­டுத்­து­தல், நிரா­க­ரிப்பு போன்ற இதர சம்­ப­வங்­கள் பற்றி புகார் கொடுக்க ஏது­வாக சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு தனது முத­லா­வது 24 மணி­நேர ஒருங்­கி­ணைந்த உதவி அழைப்பு சேவை­யைத் தொடங்­கி­உள்­ளது.

வன்­மு­றைக்கு எதி­ரான தேசிய உதவி அழைப்பு சேவை எனப்­படும் இத்­திட்­டம், பல்­வேறு வகை­யான கொடு­மைப்­ப­டுத்­து­தல், நிரா­க­ரிப்பு சம்­ப­வங்­க­ளுக்கு வெவ்­வேறு உதவி அழைப்பு சேவை­க­ளைப் பயன்­படுத்து­வ­தற்­குப் பதி­லாக ஒரே அழைப்பு சேவை­யைப் பயன்­ப­டுத்த வகை செய்­கிறது.

இச்­சே­வைக்­கான அழைப்பு எண்: 1800-777-0000.

இச்­சேவை 24 மணி­நே­ர­மும் ஆண்­டின் 365 நாட்­களும் செயல்­படும். இத­னால் வன்­முறை மற்­றும் உதவி தேவைப்­படும் யாராக இருந்­தா­லும் எந்­நே­ர­மும் இச்­சே­வை­யைப் பயன்­ப­டுத்­த­லாம்.

கொடு­மைப்­ப­டுத்­து­தல் என சந்­தே­கப்­படும் சம்­ப­வங்­கள் பற்றி தெரி­விக்­க­வும் பொது­வான விசா­ரிப்­பு­களுக்­கும் பொது­மக்­கள், நிபு­ணர்­கள் இந்த உதவி அழைப்பு சேவையை நாட­லாம் என்று தெரி­விக்­கப்­பட்டு­ள்­ளது.

இந்த உத­விச் சேவை நிலை­யத்தை ‘டிஎச்­எல்’ நிறு­வ­னத்­தின் வாடிக்­கை­யா­ளர் சேவை அதி­காரி­களும் மாண்ட்­ஃபர்ட் கேர் அமைப்­பின் சமூக சேவை நிபு­ணர்­களும் கையா­ளு­கின்­ற­னர்.

அவர்­கள் குறிப்பிட்ட சம்­ப­வத்­தின் தீவிரத்தை ஆராய்­தல், அடிப்­படை உள­வி­யல் ஆத­ரவு மற்­றும் அழைக்­கும் நபரை அவ­ரது பிரச்­சி­னைக்­குத் தீர்வு வழங்­கக்­கூ­டிய அமைப்­பி­டம் திருப்பி விடு­தல் போன்ற தனிப்­பட்ட ஆத­ரவை வழங்கு­வார்­கள்.

இதற்­காக, ‘டிஎச்­எல்’ நிறு­வ­னத்­தின் வாடிக்­கை­யா­ளர் சேவை அதி­கா­ரி­கள் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் குழந்தைப் பாது­காப்­புச் சேவை மற்­றும் பெரி­ய­வர்­கள் பாது­காப்­புச் சேவை ஆகிய பிரி­வு­களில் பயிற்சி பெற்று, குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரு­க்கு எவ்­வாறு உதவி வழங்­க­லாம் என்று தெரிந்­து­கொண்­ட­னர்.

இந்த உதவி அழைப்­புச் சேவை பொது­வாக ஆங்­கி­லத்­தில் நடத்­தப்­ப­டு­கிறது. தேவை ஏற்­பட்­டால் மாண்­ட­ரின், மலாய், தமிழ் பேசும் அதி­கா­ரி­களும் சேவை வழங்க தயார்நிலையில் இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!