உள்ளூர் வனப்பகுதிகளில் சுமார் 400 விலங்குகள் பிறந்தன

உள்ளூர் வனப்பகுதிகளில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 400 விலங்குகள் பிறந்ததாக சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம் இன்று தெரிவித்தது. அவற்றில் அருகிவரும் சில விலங்குகளும் அடங்கும்.

பிறந்த 107 விலங்கினங்களில் 29 விலங்கினங்கள் அருகிவரும் பிரிவில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவற்றில் முற்றிலும் அழியும் அபாயத்தில் இருக்கும் இரண்டு மலாயா புலிக்குட்டிகள் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டது. 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரில் இப்போதுதான் மலாயா புலிக்குட்டிகள் பிறந்துள்ளன.

“உலகில் ஏறத்தாழ 150 மலாயா புலிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. எனவே, புதிதாகப் பிறந்திருக்கும் இவ்விரு மலாயா புலிக்குட்டிகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளன,” என்று சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகத்தின் தலைமை உயர் அறிவியல் அதிகாரி டாக்டர் செங் வென்-ஹோர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பிறந்த அவ்விரு மலாயா புலிக்குட்டிகள் அவற்றின் தாயுடன் நைட் சஃபாரியில் உள்ளன.

இரண்டு மலாயா புலிக்குட்டிகளையும் விலங்கு பராமரிப்புக் குழு மிக அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!