போலி இணையப்பக்கம் குறித்து போலிசில் புகார்

போலி இணையப்பக்கம் குறித்து போலிசில் புகார்

1 mins read
9cc85fb3-2854-42e9-b34d-029c478a9ac9
-

போலி குடியுரிமை, சோதனைச்சாவடி ஆணையம் இணையப்பக்கம் குறித்து போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்த போலி இணையப்பக்கம் பார்ப்பதற்கு ஆணையத்தின் இணையத்தளத்தைப் போலவே இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையத்தளமான www.ica.gov.sg பாதிப்புக்குள்ளாகவில்லை என்றும் அதிலிருந்து தரவுகள் திருடப்படவில்லை என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

"இம்மாதிரியான போலி இணையத்தளங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எங்களுடைய கட்டமைப்பின் மேல் பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இவை சீர்குலைக்கின்றன," என்று ஆணையம் கூறியது.

ica-mom.online எனும் போலி இணையப்பக்கத்தை அகற்ற ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அது கூறியது.