விதிமீறல்: தம்பதிக்குச் சிறை

விதிமீறல்: தம்பதிக்குச் சிறை

2 mins read
8bdeb5d6-f746-450e-ae6c-caa2edbbd64e
நைஜல் ஸ்கியா, 52, என்னும் பிரிட்டிஷ் ஆடவருக்கு இரு வாரச் சிறையும் சிங்கப்பூரரான அகதா மகேஷ் ஈய­மலை, 39, என்னும் அவரது மனைவிக்கு ஒரு வாரச் சிறையும் விதிக்கப்பட்டுள்ளன. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 தொடர்­பான இல்­லத்­த­னிமை உத்­த­ரவை மீறி­ய­தற்­காக பிரிட்­டிஷ் ஆட­வ­ருக்­கும் அவ­ரைச் சந்­தித்த மனை­விக்­கும் நேற்று சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. நைஜல் ஸ்கியா, 52, என்­னும் அந்த ஆட­வர் கடந்த ஆண்டு செப்­டம்­பர் 20ஆம் தேதி சாங்கி விமான நிலை­யத்­தில் இறங்­கி­ய­தும் அவ­ருக்கு இல்­லத் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து அப்­போ­தைய அவ­ரது வருங்­கால மனை­வி­யான அகதா மகேஷ் ஈய­மலை, 39, என்­னும் சிங்­கப்­பூர் பெண்­ம­ணிக்கு அவர் அந்த உத்­த­ரவு குறித்து தெரி­வித்­தார். அந்­தப் பெண், மரினா பேயில் உள்ள ரிட்ஸ் -கார்ல்ட்டன் மில்­ல­னியா ஹோட்­ட­லில் அறை ஒன்றை முன்­ப­திவு செய்­ தார். அவரும் அதே ஹோட்­ட­லின் 27வது மாடி­யில் தங்­கி­னார்.

ஸ்கியா தமது 14வது மாடி அறை­யி­லி­ருந்து செப்­டம்­பர் 21ஆம் தேதி பின்­னி­ரவு 2.22 மணிக்கு அக­தா­வைச் சந்­திக்க அவ­சர வெளி­யே­றும் படிக்­கட்­டு­கள் வழி­யாக முகக்­க­வ­சம் அணி­யா­மல் சென்­றார். அக­தா­வின் அறை­யில் நேரத்­தைச் செல­விட்ட பின்­னர் முற்­ப­கல் 11.13 மணிக்­குத் தமது அறைக்கு ஸ்கியா திரும்­பி­ய­போது அவ­ரது மாடிக்­குச் செல்­வ­தற்­கான அனு­மதி மறுக்கப்பட்டது. பின்­னர் நான்­கா­வது மாடிக்கு இறங்­கிச் சென்ற அவரை பாது­கா­வ­லர் தடுத்­தார்.

ஸ்கியா தம் மீது சுமத்­தப்­பட்ட கொவிட்-19 தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள் சட்­டத்­தின்­கீ­ழான ஒரு குற்­றத்­தை­யும் தொற்­று­நோய் தடுப்­புச் சட்­டத்­தின்­கீ­ழான ஒரு குற்­றத்­தை­யும் இம்­மா­தம் 15ஆம் தேதி ஒப்­புக்­கொண்­டார். அவ­ருக்கு இரு வார சிறைத் தண்­ட­னை­யும் $1,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டன.

தொற்­று­நோய் தடுப்­புச் சட்­டத்­தின்­கீழ் சுமத்­தப்­பட்ட ஒரு குற்­றத்­திற்­காக அக­தா­வுக்கு ஒரு வார சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. முன்­ன­தாக, இரு­வ­ரும் கடந்த ஆண்டு நவம்­ப­ரில் மணம் புரிந்­து­கொண்­ட­னர்.