இந்தோனீசியாவில் கிருமி தொற்றி, சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட சிங்கப்பூரர் உயிரிழப்பு

இந்தோனீசியாவிலிருந்து கொவிட்-19 சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டிருந்த சிங்கப்பூரர், நேற்று முன்தினம் (பிப்ரவரி 26) உயிரிழந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் தேதி முதல் இந்தோனீசியாவில் வசித்து வந்த அந்த 64 வயது ஆடவருக்கு ரத்த மிகை கொழுப்பு பிரச்சினை இருந்ததாக சுகாதார அமைச்சின் நேற்றைய அறிக்கை தெரிவிக்கிறது.

இவ்வாண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்தோனீசியாவில் இருந்தபோது அவருக்கு கிருமி தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் அங்கு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த ஜனவரி 29 அன்று மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரின் தேசிய தொற்றுநோய்கள் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார். ஜனவரி 30 அன்று செய்யப்பட்ட பரிசோதனையிலும் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

அவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது ஏற்கெனவே இந்தோனீசியாவில் பதிவாகியுள்ளதால், அவர் சிங்கப்பூர் கொவிட்-19 எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவரது குடும்பத்தாருக்கு தேசிய தொற்றுநோய்கள் நிலையம் உதவி வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!