அறவே அண்டாத சளிக்காய்ச்சல்; 8 மாதங்களாக பலதுறை மருந்தகங்களில் ஒரு சம்பவம்கூட பதிவாகவில்லை

கடந்த எட்டு மாத காலத்­தில் இங்­குள்ள 60க்கும் மேற்­பட்ட பல­துறை மருந்­த­கங்­க­ளி­லும் நோய்க்­குறி கண்­கா­ணிப்பு (சென்­டி­னல்) பொது மருந்­த­கங்­க­ளி­லும் ஒரு­வர்­கூட சளிக்­காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­ட­தாக உறு­தி­செய்­யப்­ப­ட­வில்லை.

தொற்­றுப் பர­வல் சாத்­தி­யங்­களைக் கண்­கா­ணிக்­க­வும் சளிக்­காய்ச்­சல் கிரு­மி­க­ளின் தட­ம­றி­ய­வும் இந்­தப் பல­துறை மருந்­த­கங்­க­ளை­யும் பொது மருந்­த­கங்­க­ளை­யும் சுகா­தார அமைச்சு பயன்­ப­டுத்தி வரு­கிறது.

கடந்த ஆண்டு ஏப்­ர­லில் நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பிற்கு வரு­வ­தற்கு முன்­ன­ரும் முகக்­க­வ­சம் அணி­தல் போன்ற பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் அறி­மு­க­மா­வ­தற்கு முன்­பும், கடந்த பத்தாண்­டு­களில் ஆய்­வ­கச் சோத­னை­கள் மூலம் சளிக்­காய்ச்­சல் பாதிப்பு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத மாதமே இல்லை.

அம்­ம­ருந்­த­கங்­கள் சளிக்­காய்ச்­சல் பாதிப்பு இருப்­பது­போ­லத் தோன்­றும் நோயாளி­களி­டம் இருந்து மாதி­ரி­களைச் சேகரித்து, தேசிய பொதுச் சுகா­தார ஆய்­வ­கத்­திற்குச் சோதனைக்கு அனுப்­பும்.

கடை­சி­யாக, சென்ற ஆண்டு மே மாதத்­தில் ‘ஏ’ வகை சளிக்­காய்ச்­ச­லால் ஒரு­வர் பாதிக்­கப்­பட்­டது உறு­தி­செய்­யப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்­சின் வாராந்­திர தொற்று­நோய்­கள் சஞ்­சிகை தெரி­விக்­கிறது.

“கண்­கா­ணிப்­புத் திட்­டம் தொடங்­கப்­பட்­ட­தில் இருந்து, இந்த அள­விற்­குச் சளிக்­காய்ச்­சல் நில­வரம் குறைந்­தி­ருப்­பது இதுவே முதன்­முறை,” என்று அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

2020 ஜன­வ­ரி­யில் 320 பேரைச் சளிக்­காய்ச்­சல் கிருமி தொற்­றி­யது உறு­தி­செய்­யப்­பட்­ட­தாக அந்­தச் சஞ்­சிகை குறிப்­பிட்­டுள்­ளது. குளிர்­கா­லத்­தில் சளிக்­காய்ச்­சல் கிருமி அதி­க­மா­கப் பர­வும் என்­பதே அதற்­குக் கார­ணம் எனச் சொல்­லப்­பட்டது.

மாறாக, இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் சளிக்­காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­து­போல தோன்­றிய 231 பேரின் மாதி­ரி­க­ளைச் சோதித்­த­தில் அவர்­களில் ஒரு­வ­ரை­யும் சளிக்­காய்ச்­சல் கிருமி தொற்­ற­வில்லை எனத் தெரி­ய­வந்­தது.

இருப்­பி­னும், மாதத்­திற்கு 200-250 மாதி­ரி­கள் சோதிக்­கப்­ப­டு­வது தொட­ரும் என்று அப்­பேச்­சா­ளர் கூறி­னார்.

பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் இன்­னும் நடப்­பி­லி­ருக்­கும் நிலை­யில், கடந்­தாண்டு அதி­க­மா­னோர் சளிக்­காய்ச்­சல் தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்­ட­தும் சளிக்­காய்ச்­சல் பாதிப்பு சரிந்­த­தற்கு ஒரு கார­ண­மாக இருக்­க­லாம் என்று மருத்­து­வப் பயி­ல­கத்­தின் தொற்­று­நோய் மருத்­து­வர்­கள் பிரி­வின் தலை­வர் டாக்­டர் அசோக் குருப் குறிப்­பிட்­டார்.

மக்­கள் வெளி­நா­டு­க­ளுக்­குப் பய­ணம் செய்ய முடி­யா­த­தால் பல­வகை கிரு­மி­கள் இங்கு நுழை­வதற்­குச் சாத்­தி­ய­மில்­லா­மல் போன­தை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

ஆண்­டி­று­திப் பய­ணங்­கள் பெரி­தும் குறைந்­த­தால் சளிக்­காய்ச்­சல் மற்­றும் பிற சுவா­சக் கோளாறு தொடர்­பான கிரு­மி­கள் வரு­வது குறைந்­தி­ருக்­க­லாம் என்­பதை என்­யு­எஸ் சா சுவீ ஹாக் மருத்­து­வப் பள்­ளி­யின் இணைப் பேரா­சி­ரி­யர் சு லியாங்­கும் ஒப்­புக்­கொண்­டார்.

சளிக்­காய்ச்­ச­லுக்­கும் கொரோனா தொற்­றுக்­கும் காய்ச்­சல், சோர்வு, இரு­மல் போன்ற பொது­வான அறி­கு­றி­கள் இருப்­ப­தால் கடந்த ஆண்டு பொது­மக்­கள் சளிக்­காய்ச்­சல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­படி வலி­யு­றுத்­தப்­பட்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரி­லும் உல­க­ள­வி­லும் சளிக்­காய்ச்­சல் பாதிப்பு வெகு­வா­கக் குறைந்­தி­ருப்­ப­தாக சுகா­தார அமைச்­சின் பேச்­சா­ளர் சொன்­னார்.

ஆயி­னும், “எல்­லை­கள் திறக்­கப்­ப­டு­வ­தாலும் பொரு­ளி­யல், சமூக நட­வ­டிக்­கை­கள் படிப்­ப­டி­யாகத் தொடங்­கு­வ­தா­லும் பொது­மக்­களில் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் இடை­யி­லான தொடர்­பு­களும் அதி­க­ரிக்­கும். ஆகை­யால், சளிக்­காய்ச்­சல் நில­வரம் குறித்து நாங்­கள் தொடர்ந்து கண்­கா­ணிப்­போம்,” என்­றார் அவர்.

நல்ல சுகா­தா­ரப் பழக்­க­வ­ழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டிப்­பதை, முகக்­க­வ­சம் அணி­வ­தைத் தொட­ரும்­ப­டி­யும் உடல்­நிலை சரி­யில்லை எனில் மருத்­து­வரை நாடு­மா­றும் அவ்­வே­ளை­களில் கிருமி பர­வும் சாத்­தி­யத்­தைக் குறைக்க பள்­ளிக்கு அல்­லது பணிக்­குச் செல்­லா­மல் இருக்­கு­மா­றும் பொது­மக்­களை அமைச்சு வலி­யு­றுத்தி இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!