செம்பவாங் சமூகத் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் குடியிருப்பாளர்களுக்கு விநியோகம்

செம்­ப­வாங் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த, தேவை­யுள்ள குடி­யி­ருப்­பா­ளர்­கள் இனி இயற்கை முறை­யில் விளை­விக்­கப்­பட்ட காய்­க­றி­க­ளைச் சுவைத்­துப் பார்க்­க­லாம்.

இதற்­காக, அங்­குள்ள 23 சமூ­கத் தோட்­டங்­களில் பணி­யாற்­றும் கிட்­டத்­தட்ட 250 குடி­யி­ருப்­பா­ளர்­கள் ஒன்­றி­ணைந்து செயல்­பட்டு அடுத்த ஆண்­டில் தாங்­கள் விளை­விக்­கும் காய்­க­றி­களை விநி­யோ­கிக்­க­வுள்­ள­னர்.

செம்­ப­வாங் குழுத்­தொ­குதி ‘கார்­டன்ஸ் கிவ் பேக்’ திட்­டத்­தின்­கீழ், அவ்­வட்­டா­ரத்­தில் உள்ள சமூ­கத் தோட்­டங்­களில் விளைந்த கிட்­டத்­தட்ட 200 கிலோ காய்­க­றி­கள், செம்­ப­வாங் வெஸ்ட் மற்­றும் அட்­மி­ரல்டி பகு­தி­க­ளைச் சேர்ந்த 270 குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன. அத்­து­டன், எண்­ணெய், உப்பு, துணி­ம­ணி­கள் போன்ற அத்தியாவசியப் பொருள்­களும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன.

சமூ­கத் தோட்­டங்­களில் விளைந்த கீரை­கள், காய்­க­றி­க­ளைப் பறிக்­கும் நட­வ­டிக்­கை­யில் திரு விக்­ரம் நாய­ரும் செம்­ப­வாங் குழுத் தொகுதி எம்.பி.க்களில் ஒரு­வ­ரான திரு­வாட்டி போ லீ சானும் குடி­யிருப்­பா­ளர்­க­ளுக்­கு உதவினர்.

“குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் குடி­யி­ருப்­பா­ளர்­களும் ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­மு­றை­யைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்­பதை உறுதி­செய்ய முயல்­கி­றோம். பெரும்­பாலும் அவர்­கள் போது­மான காய்­க­றி­களை உண்­ப­தில்லை. ஆகவே, அவர்­களுக்­குக் காய்­க­றி­களை வழங்கு­வ­தன்­மூ­லம், அவர்­கள் அவற்றை அதி­க­மாக உண்­ணும்­படி ஊக்­கு­விக்க முடி­யும் என நம்­பு­கி­றோம்,” என்­றார் திரு விக்­ரம்.

சமூ­கத்­திற்­குத் திருப்­பித் தரு­வதன் மூலம் இந்­தத் திட்­டம் குடி­யி­ருப்­பா­ளர்­களை ஒன்­றி­ணைக்க உத­வு­கிறது என்று திரு­வாட்டி சான் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!