8,000 குடும்பங்களுக்கு நன்கொடை

“ஃபெஸ்டிவ் சீயர்ஸ் @ சவுத்­வெஸ்ட்” திட்­டத்­தின் மூலம் உத­வும் பொருட்டு நூற்­றுக்­கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­க­ளு­டன் சமூக பங்­கா­ளி­கள் ஒன்று திரண்டு தென்மேற்கு வட்டாரவாசிகளுக்கு­ நன்கொடை அளித்­துள்ளனர்.

விழாக்­கால நன்­கொடைத் திரட்டு நிகழ்ச்­சி­யில் கொவிட்-19 நெருக்­க­டி­யால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் குடும்­பங்­க­ளுக்கு உதவ நன்­கொடை அளித்து உதவ சமூக அமைப்­பு­க­ளு­டன் சிறிய, பெரிய நிறு­வ­னத்­தி­னர் மற்­றும் இணைய வர்த்­த­கர்­கள் ஆகி­யோர் ஒருங்­கி­ணைந்­த­னர்.

புத்­தாடை, நோட்­டுப்­புத்­த­கங்­கள், பேனா, பென்­சில், மளி­கைச் சாமான்­கள் வாங்­கு­வ­தற்­கான பற்­றுச்­சீட்­டு­கள், குழந்­தை­க­ளுக்­கான விளை­யாட்­டுச் சாமான்­கள் என நலிந்த முதி­யோர் குடும்­பங்­க­ளுக்­கும் அவர்­க­ளின் குழந்­தை­க­ளுக்­கும் உத­வி­கள் வழங்­கப்­பட்­டன.

கிடைக்­கப்­பெற்ற நன்­கொ­டை­கள் 2020 நவம்­பர் மாதத்­தில் இருந்து 2021 பிப்­ர­வரி மாதம் வரை விநி­யோ­கிக்­கப்­பட்­டன. நன்­கொடைப் பொருட்­களை விநி­யோ­கிப்­ப­தற்கு 5,000க்கும் மேற்­பட்ட தொண்­டூ­ழி­யர்­கள் உத­விக்­க­ரம் நீட்­டி­னர். இத­னால் தென்மேற்கு வட்­டா­ரத்­தைச் சேர்ந்த ஏறக்­குறைய 8,000 குடும்­பங்­கள் பல­ன­டைந்­தன. இந்­தத் திட்­டத்­தின் மூலம் கிடைத்த மொத்த நன்­கொடை $600,000ஐ தாண்­டி­யது. இது கடந்த ஆண்­டின் இதே காலக்­கட்­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் 103% அதி­கம்.

சமூக மேம்­பாட்டு மன்­றம் இந்த நன்­கொ­டைத் திட்­டத்­திற்­காக முதன்­மு­த­லாக இணைய வர்த்­த­கர்­க­ளு­டன் கைகோத்­தது. ஃபேஸ்புக், இன்ஸ்­ட­கி­ராம் ஆகிய சமூக இணை­யத்­த­ளங்­கள் மூலம் வர்த்­த­கம் செய்­வோ­ரி­டம் இருந்து $18,000க்கும் அதிக மதிப்­புள்ள பொருட்­கள் நன்­கொ­டை­யா­கப் பெறப்­பட்­டன.

மேயர் லோ யென் லிங், நன்­யாங் அடித்­தள அமைப்­பு­க­ளின் ஆலோ­ச­க­ரும், வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஆங் வெய் நெங் மற்றும் தோட்­டக்­கலை தொழில்­துறை சங்­கத்­தைச் சேர்ந்த தொண்­டூ­ழி­யர்­களும் இணைந்து ஜூரோங் வெஸ்ட் வட்­டா­ரத்­தில் வாடகை வீடுகளில் வசிக்கும் 500 குடும்­பங்­க­ளுக்கு தலா $70 மதிப்­புள்ள விழாக்­கா­லப் பரி­சுப் பொட்­ட­லங்­களை நன்­கொ­டை­யாக அளித்­த­னர்.

அதில் அரிசி, சாக்­லெட், முகக்­க­வ­சம் உள்­ளிட்ட பொருட்­கள் இருந்­தன.

“இந்த கொவிட்-19 நெருக்­கடி, நமது கொடுக்­கும் ஆற்­ற­லைத் தடுக்­க­வில்லை. மாறாக இந்த நெருக்­கடி நம்மை ஒன்­றி­ணைத்­துள்­ளது.

“இந்த ஆண்டு கிடைத்த நன்­கொ­டை­யும், உதவி பங்­கா­ளர்­களும் கடந்த ஆண்­டி­லும் இரு மடங்­கா­கி­யுள்­ளது.

“இது­வ­ரை­யி­லும் இல்­லாத வகை­யில் 105 நிறு­வ­னங்­கள் மற்­றும் சமூக பங்­கா­ளி­கள் ஒன்­றி­ணைந்து இந்த விழாக்­கால நன்­கொ­டைத் திட்­டத்­திற்­குக் கைகொ­டுத்­துள்­ளன.

“சமூ­கங்­களை ஒன்­றி­ணைத்து நம்­மி­டம் உள்ள வளங்­களை ஒருங்­கி­ணைத்து நமது சமூ­கத் தொடர்பை மேலும் வலுப்­படுத்தி, சவுத் வெஸ்ட் வட்­டா­ரத்தை அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய அக்­க­றை­யுள்ள சமூ­க­மாக ஆக்­கும் பணி­யை சமூக மேம்­பாட்டு மன்­றம் தொட­ரும் என்று கலாசார, சமூக, இளையர் அமைச்சு மற்றும் வர்த்தக தொழில் துணை அமைச்சருமான லோ கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!