பத்தில் அறுவருக்கு சம்பளம் குறையவில்லை

பத்தில் அறுவருக்கு சம்பளம் குறையவில்லை

2 mins read

வேலை வளர்ச்சி ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் பணியமர்த்தப்பட்டோர்

வேலை வளர்ச்சி ஊக்­கு­விப்­புத் திட்­டத்­தின்­கீழ் பணி­ய­மர்த்­தப்­பட்ட 10ல் ஆறு ஊழி­யர்­க­ளுக்­கும் மேற்­பட்­டோர் முந்­தைய வேலை­யில் பெற்ற அதே சம்­ப­ளம் அல்­லது அதை­விட அதி­க சம்­ப­ளத்­தைப் பெற்­றுள்­ள­னர்.

மேலும், இத்­திட்­டத்­தின்­கீழ் வேலை­யில் சேர்க்­கப்­பட்­டுள்ள 10ல் மூவர் முன்பு வேலை­யின்றி இருந்­த­தாக மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

"இவர்­களில் பெரும்­பா­லா­னோர் ஆறு மாதங்­க­ளுக்­கும் மேலாக வேலை­யின்றி இருந்­த­னர்," என்­றார் அவர்.

இவ்­வாண்டு செப்­டம்­பர் மாதம் இறு­தி­வரை வேலை வளர்ச்சி ஊக்­கு­விப்புத் திட்­டம் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

உள்­ளூர்­வா­சி­கள் தொடர்ந்து வேலை­யில் இருப்­பதை உறு­தி­செய்யும் விதமாக அர­சாங்­கம் எடுத்­துள்ள முயற்­சி­களில் இத்­திட்­டமும் ஒன்று என்று அமைச்­சர் டியோ சொன்­னார்.

இவ்­வாண்டு தமது அமைச்சு முன்­னு­ரிமை அளிக்­கும் மற்ற இரு பணி­களை அவர் பட்­டி­ய­லிட்­டார். முத­லா­வது, ஊழி­ய­ர­ணி­யின் ஒவ்­வொரு பிரி­வும் வலு­வாக உரு­வெடுப்­ப­தற்கு உத­வு­வது. இரண்­டா­வது, வர்த்­தக உரு­மாற்­றத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­பது.

"நாம் உட­ன­டி­யாக கவ­னம் செலுத்­த­வேண்­டிய அம்­சங்­கள் ஒரு­பு­ற­மி­ருக்க, இடைக்­கால, நீண்­ட­கா­லப் பிரச்­சி­னை­க­ளி­லும் கவ­னத்தை விட்­டு­வி­டக்­கூ­டாது.

"மின்­னி­லக்­க­ம­யம், வீட்­டி­ல் இருந்து வேலை செய்­வது, பெருகி­ வ­ரும் வரு­மான இடை­வெளி, மூப்­படைந்து வரும் ஊழி­ய­ரணி போன்­றவை நமக்­குத் தொடர்ந்து சவா­லாக விளங்­கும்," என்று கூறிய அமைச்­சர் டியோ, காலப்­போக்­கில் வேலை தரத்தை மேம்­ப­டுத்த முத­லா­ளி­கள் புத்­தாக்க முயற்­சி­களை முன்­னெ­டுப்­பது முக்­கி­யம் என வலி­யு­றுத்­தி­னார்.

கடந்த ஆண்டு செப்­டம்­ப­ரில் வேலை வளர்ச்சி ஊக்­கு­விப்­புத் திட்­டம் தொடங்­கப்­பட்ட இரண்டு மாதங்­களில் 110,000க்கும் மேற்­பட்ட உள்­ளூர்­வா­சி­க­ளைப் பணி­ய­மர்த்த அது ஆத­ர­வ­ளித்­துள்­ளது. இந்த எண்­ணிக்கை ஊழி­ய­ர­ணி­யில் ஏறக்­கு­றைய 5 விழுக்­காடு.

புதிய வேலை­களில் பணி­ய­மர்த்­தப்­பட்­ட­வர்­கள் ஏறத்­தாழ பாதிப் பேர் 40 மற்­றும் அதற்­கும் மேற்­பட்ட வய­து­டை­ய­வர்­கள் என்று அமைச்­சர் டியோ தெரி­வித்­தார்.