வேலையின்மை விகிதம் தொடர்ந்து இறங்குமுகம்

சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் மீட்­சி­ அடைந்து வரும் நிலை­யில் கடந்த ஜன­வரி மாதம் வேலை­யின்மை விகி­தம் தொடர்ந்து குறைந்­தது. சிங்­கப்­பூ­ர­ர்­கள், நிரந்­த­ர­வா­சி­களுக்­கான வேலை விகி­தம் கொவிட்-19க்கு முந்­தைய நிலை­யை­விட சற்று அதி­க­ரித்­த­தாக மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ நேற்று தெரி­வித்­தார்.

ஒட்­டு­மொத்த வேலை­யின்மை விகி­தம் கடந்த ஜன­வ­ரி­யில் 3.2 விழுக்­கா­டாக குறைந்­த­து என மனி­த­வள அமைச்சு வெளி­யிட்­டு உள்ள அறிக்­கை­யில் தெரி­ய­வந்து உள்­ளது. கடந்த டிசம்­ப­ரில் அது 3.3 விழுக்­கா­டாக இருந்­தது.

சிங்­கப்­பூ­ர­ர்கள், நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கான வேலை­யின்மை விகி­தம் ஜன­வ­ரி­யில் 4.3 விழுக்­காடாக குறைந்­தது. டிசம்­ப­ரில் அது 4.4 விழுக்­கா­டாக இருந்­தது. இதற்­கி­டையே, சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கான வேலை­யின்மை விகி­தம் எந்த மாற்­ற­மு­மின்றி 4.5 விழுக்­கா­டாக இருந்­தது. ஜன­வ­ரி­யில் ஏறக்­கு­றைய 101,900 சிங்­கப்­பூரர்கள், நிரந்­த­ர­வா­சி­கள் வேலை­யின்றி இருந்­த­னர். அவர்­களில் 89,300 பேர் சிங்­கப்­பூ­ரர்­கள்.

இது­கு­றித்து அமைச்­சர் டியோ கூறு­கை­யில், "நெருக்­கடி காலத்­தில் நமது ஊழி­ய­ரணி குறிப்­பிடும்­ப­டி­யாக மீள்­தி­றனை வெளிப்­படுத்­தி­யுள்­ளது.

"சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளைத் தக்­க­வைத்­துக்­கொள்­ளும் கோரிக்­கையை முத­லா­ளி­கள் ஏற்­ற­னர்," என்­றார்.

வேலை ஆத­ர­வுத் திட்­டம், எஸ்ஜி யுனை­டெட் வேலை, திறன் தொகுப்­புத் திட்­டம் உள்­ளிட்ட பல்­வேறு திட்­டங்­க­ளைக் கோடி­காட்­டிய அவர், சிங்­கப்­பூ­ரர்­கள் வேலை­யைத் தக்­க­வைத்­துக்­கொள்ள அவை துணை­பு­ரிந்­த­தா­கச் சொன்­னார்.

உள்­ளூர்­வா­சி­க­ளைப் பணி­ அமர்த்­து­வ­தற்கு உதவ வேலை வளர்ச்சி ஊக்­கு­விப்­புத் திட்­ட­மும் கைகொ­டுத்­துள்­ளதை அவர் சுட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!