விரைவாக கட்டப்பட்ட தங்குவிடுதிகளில் தனிமை உத்தரவை நிறைவேற்றலாம்

விரைவாக கட்டப்பட்ட தங்குவிடுதிகளில் தனிமை உத்தரவை நிறைவேற்றலாம்

1 mins read
8a6555f3-3edd-4d3f-90c1-3eaec3090597
சுவா சூ காங் அவென்யூ 7 அருகே விரைவாக கட்டப்பட்ட தங்குவிடுதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கட்டுமானம், கடல்துறை, பதனிடுதல் துறைகளில் பணிபுரிய சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள்

கட்­டு­மா­னம், கடல்துறை, பதனிடுதல் தொழில்­துறை ஆகி­ய­வற்­றில் புதி­தாக சேரும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­க­ளுக்குப் பிறப்­பிக்­கப்­படும் வீட்­டி­லேயே இருக்­கும் கட்­டாய உத்­த­ர­வின் பெரும்­பா­லான பகுதியை விரை­வாக கட்­டப்­பட்ட தங்­கு­வி­டு­தி­களில் நிறை­வேற்­ற­லாம் என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இம்­மா­தம் 15ஆம் தேதி­யி­ல் இருந்து கொவிட்-19 அபா­யம் அதி­கம் உள்ள நாடு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வரும் வேலை அனு­மதி அட்டை, எஸ்-பாஸ் ஊழி­யர்­க­ளுக்கு இந்த ஏற்­பாடு பொருந்­தும்.

ஊழி­யர்­கள் இங்கு வந்­த­வு­டன் கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர். பரி­சோ­தனை முடி­வு­கள் வெளி­வ­ரும் வரை ஊழி­யர்­கள் நான்கு நாட்­களுக்கு ஹோட்­டல்­களில் தனி­மைப்­படுத்­தப்­ப­டு­வர்.

கிரு­மித்­தொற்று இல்லை என்று உறு­தி­யான பிறகு, அவர்­கள் விரை­வாக கட்­டப்­பட்ட தங்­கு­வி­டு­தி­களுக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வர். அங்கு அவர்­கள் மீத­முள்ள தனி­மைப்­ப­டுத்­தும் காலத்­தைக் கழிப்­பர். ஏற்­கெ­னவே உள்ள தங்­கு­வி­டு­தி­களை­விட விரை­வாக கட்டப்­பட்ட தங்­கு­வி­டு­தி­களில் கூடு­தல் வச­தி­கள் உள்­ளன.

விரை­வாக கட்­டப்­பட்ட தங்­கு­வி­டு­தி­களில் தங்­கி­ய­வாறு வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அவர்­க­ளுக்­கான கட்­டாய அறி­மு­கத் திட்­டத்­தில் ஈடு­ப­ட­லாம் என்­றும் ஒரே இடத்­தில் இருந்­த­வாறு மருத்­து­வப் பரி­சோதனை செய்­து­கொள்­ள­லாம் என்­றும் மனி­த­வள இரண்­டாம் அமைச்­சர் டான் சீ லெங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

"மற்ற நாடு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வரும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­ட­மி­ருந்து இங்கு கொவிட்-19 கிருமி பர­வும் அபா­யத்­தைக் குறைக்க இந்த நட­வடிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது," என்­றார் டாக்டர் டான்.