நிறுவனங்கள் வேலைகளை மறுவடிவமைக்க கூடுதல் உதவி

நிறு­வ­னங்­களில் வேலை உரு­மாற்­றத்­திற்­கான செயல்­திட்­டங்­களை உரு­வாக்க அடுத்த ஈராண்­டு­களில் கிட்­டத்­தட்ட $10 மில்­லி­யன் ஒதுக்­கப்­படும் என்று மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தெரி­வித்­துள்­ளார். மனி­த­வ­ளம், தள­வா­ட­வியல், நிதிச் சேவை துறை­களில் மூன்று வேலை உரு­மாற்­றத் திட்­டங்­கள் ஏற்­கெ­னவே நிறை­வு­பெற்­று­விட்­டன. மொத்த விற்­பனை வர்த்­த­கம், சில்­லறை விற்­பனை, உணவு உற்­பத்தி, தக­வல் தொடர்பு, ஊட­கம், விநி­யோ­கத் தொடர் நிர்­வா­கம், கணக்­கி­யல், கட்­டு­மா­னம், நிலப் போக்கு­வ­ரத்து, சுற்­றுப்­பு­றச் சேவை, சுற்றுப்­ப­ய­ணம் உள்­ளிட்ட மேலும் 12 வேலை உரு­மாற்­றத் திட்­டங்­க­ளுக்­கான திட்­டங்­களை மனி­த­வள அமைச்சு கொண்­டு உள்­ளது.

தானி­யக்­கம் போன்ற தொழில்­நுட்ப மாற்­றங்­க­ளால் வேலை, திறன்­கள் எவ்­வாறு மாற்­றி­ய­மைக்­கப்­படும் என்­பது பற்­றிய வேலை நிலை ஆய்வை இந்த வேலை உரு­மாற்­றத் திட்­டங்­கள் வழங்­கும்.

எடுத்­துக்­காட்­டாக, தள­வா­ட­வியல் துறை­யில் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்­டு­களில் தொழில்­துறை 4.0 ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய தாக்கம் குறித்து 2019ஆம் ஆண்டில் அமைப்­பு­கள்­நிலைக் குழு ஒன்று ஆராய்ந்­தது. இதில் ஏற்­கெ­னவே உள்ள 56 வேலை­கள் எப்­படி உரு­மா­றும் என்­ப­தை­யும் 12 புதிய வேலை­கள் உரு­வெ­டுக்­கும் என்­ப­தை­யும் அக்­குழு அடை­யா­ளம் கண்­டது.

தள­வா­ட­வி­யல் நிறு­வ­னங்­கள் இந்த ஆய்­வின் கண்­டு­பி­டிப்­பில் இருந்து குறிப்பு எடுத்­துக்­கொண்டு புதிய திட்­டங்­களில் முத­லீடு செய்து தங்­கள் ஊழி­யர்­க­ளுக்­குத் திறன் பயிற்சி அளித்து வரு­வதை அமைச்­சர் டியோ சுட்­டி­னார்.

"காலப்­போக்­கில் ஊழி­யர்­களுக்கு நல்ல சம்­ப­ளம் வழங்­கு­வதில் உற்­பத்­தித்­தி­றனை அதி­க­ரிப்­ப­தில் குறுக்­கு­வழி ஒன்­றும் கிடை­யாது. நிறு­வன நிலை­யி­ல் இருந்து பார்க்­கும்­போது வேலை நடை­மு­றை­கள் மாற வேண்­டும் என்­ப­து­டன் வேலை­கள் மறு­வ­டி­வமைக்­கப்­பட வேண்­டும்," என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!