அமைச்சர் லீ: ஆறு முதல் 24 மாதங்களுக்கு ஒருமுறை மரங்கள் பரிசோதிக்கப்படுகின்றன

சிங்­கப்­பூ­ரில் ஆறு முதல் 24 மாதங்­க­ளுக்கு ஒரு­முறை தேசிய பூங்­காக் கழ­கம் மரங்­க­ளைப் பரி­சோ­தித்து வரு­வ­தாக தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

மக்­கள் நட­மாட்­டம் அல்­லது வாக­னப் போக்­கு­வ­ரத்து அதி­கம் காணப்­படும் பகு­தி­களில் உள்ள மரங்­கள் அடிக்­கடி பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அவர் சொன்­னார்.

சிங்­கப்­பூ­ரில் மரங்­க­ளைப் பரி­சோ­திக்­கும் முறை, மர­வே­ளாண்மை அனைத்­து­ல­கச் சங்­கம் வெளி­யிட்­டுள்ள தலை­சி­றந்த நிர்­வாக நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­று­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

"ஒரு மரத்­தின் சுகா­தா­ரம், நிலைத்­தன்­மையை மதிப்­பி­டும்­போது மரத்­தின் உச்சி, கிளை­கள், அடி­மரம், வேர் ஆகி­ய­வற்றை தேசிய பூங்­காக் கழக ஊழி­யர்­கள் முழு­மை­யா­கப் பரி­சோ­திப்­பார்­கள்.

"மரத்­தில் ஏதே­னும் குறை­பாடு கண்­ட­றி­யப்­பட்­டால் அது கூடு­தல் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­படும். மரத்­தின் உட்­பு­றத்தை மதிப்­பி­டு­வதற்­கான சாத­னங்­கள் பயன்­படுத்­தப்­படும்," என்று அமைச்­சர் லீ விவ­ரித்­தார்.

2016ஆம் ஆண்டு நவம்­பர் முதல், 4 மீட்­ட­ருக்கு மேல் சுற்­ற­ள­வைக் கொண்ட மரங்­கள் ஆண்டு­தோ­றும் கூடு­தல் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­க­வும் தெரி­வித்த அவர், மாறி­வ­ரும் வானிலை நில­வ­ரத்­திற்கு ஏற்ப முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக இந்­தக் கூடு­தல் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கச் சொன்­னார்.

மார்­சி­லிங் பூங்­கா­வில் கடந்த மாதம் 20 மீட்­டர் உயர மரம் ஒன்று விழுந்­த­தில் மாது ஒரு­வர் கொல்­லப்­பட்­டார். அதை­ய­டுத்து தேசிய பூங்­காக் கழ­கம் மரங்­க­ளைப் பரி­சோ­திக்­கும் முறை குறித்து மார்­சி­லிங்-இயூ டீ குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் ஹெனி சோ, ஜூரோங் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் ஷான் ஹுவாங் ஆகி­யோ­ரின் கேள்­வி­களுக்­குப் பதி­ல­ளித்­த­போது அமைச்­சர் லீ இந்த விவ­ரங்­க­ளைப் பகிர்ந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!