அமைச்சர்: ஓய்வுக்கால, மறுவேலைவாய்ப்பு வயது உயர்வு திட்டமிட்டபடி இடம்பெறும்

அமைச்சர்: ஓய்வுக்கால, மறுவேலைவாய்ப்பு வயது உயர்வு திட்டமிட்டபடி இடம்பெறும்

1 mins read

ஓய்­வுக்­கால வயதை 63 ஆக­வும் மறு­வே­லை­வாய்ப்பு வயதை 68 ஆக­வும் உயர்த்­து­வது திட்­ட­மிட்­ட­படி அடுத்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இடம்­பெ­றும் என்று மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ நேற்று தெரி­வித்­தார்.

அதற்கு ஓராண்­டிற்கு முன்­ன­தா­கவே இவ்­வாண்டு ஜூலை 1 முதல், பொதுத் துறை அதன் 146,000 ஊழி­யர்­க­ளுக்கு ஓய்­வுக்­கால, மறு­வே­லை­வாய்ப்பு வயதை உயர்த்த தனது கடப்­பாட்டை நிறை­வேற்­றும் என்று அமைச்­சர் டியோ சொன்­னார்.

இதற்­கி­டையே, மூத்த ஊழி­யர்­க­ளுக்­கான மத்­திய சேம நிதி பங்­க­ளிப்பு விகி­தம் உயர்த்­தப்­ப­டு­வது அடுத்த ஆண்டு ஜன­வரி 1ஆம் தேதி திட்­ட­மிட்­டபடி இடம்­பெ­றும்.