துவாஸ் தொழிற்சாலை தீச்சம்பவம் எதிரொலி: 500 நிறுவனங்களில் அமைச்சு பரிசோதனை

துவாஸ் தொழிற்சாலை தீச்சம்பவம் எதிரொலி: 500 நிறுவனங்களில் அமைச்சு பரிசோதனை

2 mins read

வெடிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய தூசுப் பட­லத்­தைக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய கிட்­டத்­தட்ட 500 நிறு­வ­னங்­களில் பரி­சோ­தனை தொடங்­கி­யுள்­ள­தாக மனி­த­வள மூத்த அமைச்­சர் ஸாக்கி முகம்­மது நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

பிப்­ர­வரி 24ஆம் தேதி துவாஸ் தொழிற்­சா­லை­யில் ஏற்­பட்ட தீ விபத்து மனி­த­வள அமைச்­சுக்­குக் கவ­லை­ய­ளிப்­ப­தா­கச் சொன்ன அவர், தீ ஏற்­பட்­ட­தற்­கான கார­ணங்­க­ளைத் தீவி­ர­மாக ஆராய விசா­ர­ணைக் குழு ஒன்று அமைக்­கப்­படும் என்று கூறி­னார்.

இது­போன்ற சம்­ப­வம் ஏற்­ப­டு­வ­தைத் தவிர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை அக்­குழு பரிந்­து­ரைக்­கும் என்­றார் அவர்.

துவாஸ் தீச்­சம்­ப­வம் மூன்று ஊழி­யர்­க­ளின் உயிர்­க­ளைப் பறித்­தது.

"வேலை­யி­டங்­களில் அண்­மை­யில் ஏற்­பட்ட விபத்­து­கள் மனி­த­வள அமைச்­சுக்­குக் கவ­லை­ய­ளிக்­கிறது. ஒவ்­வொரு சம்­ப­வத்­தை­யும் அமைச்சு விசா­ரணை செய்து வரு­கிறது.

"உங்­க­ளது பாது­காப்பு நடை­மு­றை­களை மறு­ஆய்வு செய்­யு­மாறு தொழில்­து­றை­யில் உள்ள அனை­வரை­யும் நாங்­கள் கேட்­டுக்­கொள்­கி­றோம்," என்று மனி­த­வள அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீட்டு விவா­தத்­தின்­போது திரு ஸாக்கி கூறி­னார்.

பொதுத்­துறை கட்­டு­மா­னக் குத்­த­கை­தா­ரர்­க­ளி­டம் பாது­காப்­புச் செயல்­தினை வலி­யு­றுத்­தும் கட்­ட­மைப்பு ஒன்றை இவ்­வாண்டு பிற்­பகு­தி­யில் மனி­த­வள அமைச்சு வெளி­யி­டும் என்­றார் அவர். அதன் மூலம் பாது­காப்பை முன்­னி­றுத்­தும் நிறு­வ­னங்­களே வர்த்­தக வாய்ப்­பு­களை அதி­கம் பெறும்.

"கொவிட்-19 சூழ­லில் எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளால் நிறு­வ­னங்­கள் மனி­த­வ­ளப் பற்­றாக்­கு­றையை எதிர்­நோக்­கு­வது எங்­க­ளுக்­குத் தெரி­யும். எனி­னும், ஊழி­யர்­க­ளின் பாது­காப்பை நிறு­வ­னங்­கள் விட்­டுக்­கொடுக்­கக்­கூ­டாது," என்று திரு ஸாக்கி வலி­யு­றுத்­தி­னார்.

கடந்த டிசம்­பர் மாத நடுப்­ பகுதி­யில் இருந்து மனி­த­வள அமைச்சு அம­லாக்­கப் பணி­க­ளைத் தீவி­ரப்­படுத்­தி­யுள்­ளதை அவர் சுட்­டி­னார்.

இது­வரை மேற்­கொள்­ளப்­பட்­டு உள்ள 510 பரி­சோ­த­னை­களில் 486 விதி­மீ­றல்­கள் கண்­ட­றியப்­பட்டுள்­ள­தா­க­வும் ஏழு நிறு­வ­னங்­களுக்கு வேலை­நி­றுத்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.