ஐடிஇ மாணவர்களுக்கும் மனநல பாடத்திட்டம் அறிமுகம்

ஐடிஇ மாணவர்களுக்கும் மனநல பாடத்திட்டம் அறிமுகம்

2 mins read
ae012080-8c4d-40ca-b472-ccbfc6c6e519
-

பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­களில் கடந்த ஆண்டு புதி­தா­கத் தொடங்­கப்­பட்ட மன­நல பாடத்­திட்­டம் இவ்­வாண்டு தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழ­கத்­தி­லும் (ஐடிஇ) அறி­மு­கம் செய்­யப்­படும் என அறி­விக்­கப்­பட்டு உள்­ளது. மன­நல சுகா­தா­ரம் குறித்த விழிப்­பு­ணர்­வை­யும் புரி­த­லை­யும் ஏற்­ப­டுத்­தும் வித­மாக இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

சுகா­தார மேம்­பாட்டு வாரி­யத்­து­டன் இணைந்து உரு­வாக்­கப்­பட்டுள்ள இந்­தப் பாடத்­திட்­டம் மாண­வர்­கள் முன்­கூட்­டியே உதவி நாடு­வதை நோக்­க­மாகக் கொண்­டது என்று கல்வி துணை அமைச்­சர் சுன் சூலிங் கூறி­னார். கல்வி அமைச்­சுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்ட விவா­தத்­தில் பங்­கேற்­றுப் பேசிய அவர், மன­நல சுகா­தார ஆத­ரவு உயர் கற்­றல் நிலை­யங்­களில் அதி­க­ரித்து வரு­வதை விளக்­கி­னார்.

குறிப்­பாக, தன்­னாட்­சிப் பல்

­க­லைக்­க­ழ­கங்­கள் மாண­வர் சேர்க்­கை­யின்­போதே மன­நல சுகா­தா­ரம் பற்றி விவ­ரிப்­ப­தோடு பல்­க­லைக்­

க­ழக அள­வி­லான திட்­டங்­கள் வாயி­லாக அதனை ஊக்­கு­விப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

நீ சூன் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் கேரி டான், ஜாலான் புசார் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் டாக்­டர் வான் ரிஸால் வான் ஸக்­க­ரியா, ஜூரோங் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் ஷான் ஹுவாங் ஆகி­யோர் உள்­ளிட்ட பல உறுப்­பி­னர்­கள் எழுப்­பிய வினாக்­க­ளுக்கு திரு­வாட்டி சுன் பதி­ல­ளித்­தார். பள்­ளிக்­கூ­டங்­கள் மற்ற விவ­கா­ரங்­

க­ளுக்கு இடை­யில் மாண­வர்­

க­ளின் மன­நல சுகா­தா­ரத்­திற்­கான ஆத­ரவை எவ்­வாறு வழங்க முடி­யும் என்று திரு ஹுவாங் கேட்­டி­ருந்­தார்.

"தோல்வி தொடர்­பான பயம் என்­பது தொடர் போராட்­டம். மாண­வர்­க­ளுக்­கான இப்­போ­தைய சூழ்­நிலை இதற்கு முன்­னர் இருந்­த­தை­விட முற்­றி­லும் மாறு­பட்­டி­ருக்­கிறது," என்று குறிப்­பிட்ட திரு ஹுவாங், மாண­வர்­க­ளின் மன­

ந­லம் பற்­றியே தாம் பெரி­தும் கவ­லைப்­ப­டு­வ­தா­கக் கூறி­னார்.

சக மாண­வர்­க­ளின் ஆத­ர­வும் நிபு­ணத்­துவ ஆத­ர­வும் மன­நல சுகா­தா­ரத்­திற்­குத் தேவைப்படும் இரு முக்­கிய அம்­சங்­கள் என்று குறிப்பிட்ட அமைச்சர் சுன், மாண­வர் நலனில் கவ­னம் செலுத்த இவ்­வாண்டு முதல் தனித்­து­வ­மான அலுவலர்களை பள்­ளிகள் நிய­மிக்­கும் என்­று கூறினார்.