ஐடிஇ பட்டதாரிகள் ஆழ்ந்த தொழில் திறன்களைப் பெற புதிய நடவடிக்கை

தொழில்­நுட்ப கல்­விக்­க­ழ­கத்­தின் (ஐடிஇ) எல்லா மாண­வர்­களும் 'ஹையர் நைடெக்' தகு­திக்­கான சான்­றி­தழ் பெறும் வழி எளி­தாக்­கப்­படும் என்று கல்வி இரண்­டாம் அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மான் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

"'ஹையர் நைடெக்' கல்­வித் தகு­தியைக் குறைந்தகாலத்­தில் பெறும் வாய்ப்பை அதி­க­மான மாண­வர்­கள் பெறும் நோக்­கில் ஐடிஇ பாடத்­திட்­டத்தை நெறிப்­

ப­டுத்த இருக்­கி­றோம். இவ்­வாறு செய்­வது நமது ஐடிஇ பட்­ட­தா­ரி­கள் ஆழ்ந்த தொழில் சார்ந்த திறன்­க­ளைப் பெற உத­வும். அத்­து­டன் அவர்­ க­ளின் எதிர்­கா­லத் திறன் மேம்­பா­டு­க­ளுக்கு வலு­வான அடித்­

த­ளத்­தை­யும் இது அமைத்­துத் தரும்," என்­றார் அவர்.

நைடெக், ஹையர் நைடெக் என்­னும் இரு கல்­வித்­த­கு­தி­களை நிறை­வு­செய்ய பெரும்­பா­லான மாண­வர்­க­ளுக்கு நான்­காண்­டு­கள் தேவைப்­ப­டு­கின்­றன. இவற்­றில் நைடெக் பாடத்­தைக் கற்க மட்­டும் ஈராண்­டு­கள் ஆகின்­றன. ஹையர் நைடெக்­கின் பெரும்­பா­லான பாடங்­க­ளுக்­கும் கிட்­டத்­தட்ட இதே கால அளவு தேவைப்­ப­டு­கிறது.

நைடெக் பாடங்­களை நிறைவு செய்த பின்­னர் 30 விழுக்­காட்டு பட்­ட­தா­ரி­கள்

அர­சாங்க நிதி ஆத­ரவு பெற்ற எந்த ஒரு வழி­யை­யும் நோக்கி முன்­னேற இய­ல­வில்லை என்று கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

ஐடி­இ­யில் சேரும்­போதே ஹையர் நைடெக் கல்­வித்­த­குதி பெற வேண்­டும் என்ற எல்லா மாண­வர்­க­ளின் ஆசை­யை­யும் நிறை­வேற்ற வேண்­டும் என்­பதே அர­சாங்­கத்­தின் விருப்­பம் என்­றும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!