கொவிட்-19 சூழல் காரணமாக உயரும் காப்புறுதிக் கட்டணங்கள்

கொவிட்-19 சூழல் காரணமாக உயரும் காப்புறுதிக் கட்டணங்கள்

1 mins read
915f8826-ba24-4bd7-946c-2d2cd4b7472d
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொவிட்-19 கொள்ளைநோய் சூழல் காரணமாக பல்வேறு வர்த்தகப் பிரிவுகளிலும் காப்புறுதிக் கட்டணம் அதிகரித்து வருவதாக அனைத்துலக அளவிலான அபாயம், ஓய்வு மற்றும் சுகாதாரத் தீர்வுகள் வழங்கும் அயோன் நிறுவனம் கூறியது,

இழப்புகள் ஏற்படுவதைக் குறைக்கும் விதத்தில் காப்புறுதி நிறுவனங்களுக்கும் தங்களது வாடிக்கையாளர்களும் செயல்படும் திட்டங்களைப் புதுப்பிப்பது உட்பட புதிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

அதிகரித்து வரும் காப்புறுதிக் கட்டணங்களைச் சரிக்கட்டும் விதத்தில் கழிவுத் தொகையை அதிகரிப்பது உட்பட பல்வேறு மாற்று வழிமுறைகளை நடைமுறைப்படுத்துகின்றன வர்த்தகங்கள்.

கொவிட்-19 தொடர்பான தாக்கம் வர்த்தகங்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களால் இன்னும் முழுமையாக உணரப்படவில்லை என்று குறிப்பிட்ட அயோன் நிறுவனத்தின் ஆசியாவுக்கான வர்த்தக அபாயத் தீர்வுகளின் தலைமை தரகு அலுவலர் பிரென்ட் கிளாசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் அதன் தாக்கம் உணரப்படும் என்றாலும் தடுப்பூசி போடப்படுவதால் நிலைமை சீரடையும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.