அங் மோ கியோ அவென்யூ 10 புளோக் 456ல் உள்ள மூவறை வீடு ஒன்றில் இன்று காலை தீ மூண்டதாக குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் வீட்டிற்குள் சுயநினைவின்றி இருந்த 20 வயது ஆடவரையும் 48 வயது மாதுவையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தீக்காயங்கள் காரணமாக அந்த மாது மருத்துவமனையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மாதுவின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று வகைப்படுத்தி போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருவரும் தாய்-மகன் என நம்பப்படுகிறது.
தீச்சம்பவம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடத்திலிருந்து ஏறத்தாழ 30 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

