2024ஆம் ஆண்டுக்குள் $20 பில்லியன் முதலீட்டை சிங்கப்பூரின் கடற்துறை எதிர்பார்க்கலாம் என்றும் அதன் காரணமாக கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹோங் டாட் இன்று தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்குள் புதிய கடற்துறை தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
முதலீடு காரணமாக கடற்துறைச் சட்டம், கப்பல் நிர்வாகம், கடற்துறைக் காப்புறுதித் திட்டம் ஆகியவற்றில் கூடுதல் வேலை வாய்ப்பு உருவாகும்.