தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு $655 மில்லியனுக்கும் அதிகமான நிவாரணத் தொகை

1 mins read
d497891e-102e-4e84-910a-1449d4f6116f
50,000க்கும் அதிகமான ஓட்டுநர்களுக்கு சிறப்பு நிவாரண நிதியின்கீழ் $155 மில்லியனுக்கும் அதிகமான நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த மாத நிலவரப்படி 50,000க்கும் மேற்பட்ட டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு $655 மில்லியனுக்கும் அதிகமான நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் இன்று தெரிவித்தார்.

கூடுதல் ஆதரவு தேவைப்பட்டால் இம்மாதத்துக்கும் ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கொவிட்-19 ஓட்டுநர் நிவாரண நிதியின்கீழ் மேலும் $116 மில்லியன் ஒதுக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த $655 மில்லியன் நிவாரணத் தொகையில் சொந்த தொழில் செய்வோருக்கான வருமான நிவாரணத் திட்டத்தின்கீழ் 57,000க்கும் அதிகமான ஓட்டுநர்களுக்கு $500 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டது.

50,000க்கும் அதிகமான ஓட்டுநர்களுக்கு சிறப்பு நிவாரண நிதியின்கீழ் $155 மில்லியனுக்கும் அதிகமான நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்