இன்று நண்பகல் நிலவரப்படி சிங்கப்பூரில் மேலும் 9 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,0007ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஒன்பது பேரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.
சமூக அளவில் 81 வயது மூதாட்டிக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
அவர் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்ட 82 வயது முதியவரின் மனைவியாவார்.
நேற்று புதிதாக 18 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். கானா, இந்தியா, பங்ளாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அவர்கள் வந்தனர்.
நேற்று எட்டு பேர் கொரானா கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை மொத்தம் 59,842 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர்.
மொத்தம் 24 பேர் கொவிட்-19 காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் ஒருவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தனிமைப்படுத்தும் வளாகங்களில் 88 பேர் குணமடைந்து வருகின்றனர்.

