வெடித்துச் சிதறிய கண்ணாடிக் கதவு; நூலிழையில் தப்பிய ஆடவர்

வெடித்துச் சிதறிய கண்ணாடிக் கதவு; நூலிழையில் தப்பிய ஆடவர்

1 mins read
5d96dfcf-d4a7-46d3-a751-287b9322c281
கண்ணாடிக் கதவு வெடித்துச் சிதறுவதைக் காட்டும் கண்காணிப்பு கேமரா பதிவு. படம்: எல்டோரா லாய் ஃபேஸ்புக் -

பொங்கோல் ஈஸ்ட் வட்டாரத்தில் இருக்கும் ஒரு வீட்டில் கண்ணாடிக் கதவு ஒன்று திடீரென்று வெடித்துச் சிதறியது.

இந்தக் காட்சி அந்த வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

வீட்டு உரிமையாளர் அந்தக் கண்ணாடிக் கதவைக் கடந்து சென்று சமையலறைக்குள் சென்ற சில வினாடிகளில் அது வெடித்துச் சிதறியது.

இன்னும் கொஞ்சம் மெதுவாக நடந்திருந்தால் நிச்சயம் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும் என்றார் அவர்.

வரவேற்பு அறையில் விளையாடிக்கொண்டிருந்த அவரது 15 மாத இரட்டைக் குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

கண்ணாடிக் கதவு வெடித்ததில் வரவேற்பு அறைத் தரையில் கண்ணாடித் துண்டுகள் சிதறின. இதன் காரணமாக 38 வயது திரு சித்தோ, அவரது மனைவியான 33 வயது திருவாட்டி எல்டோரா லாய் ஆகியோருக்குப் பாதங்களில் இலேசான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.