டிரேஸ்டுகெதர் சாதனங்களை இன்னும் வைத்திருக்காத மாணவர்கள் இந்த மாதத்தின் இறுதிக்குள் தத்தம் பள்ளிகளிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கல்வியமைச்சு கடந்த வாரம் தெரிவித்தது.
ஏப்ரல் முதல் டிரேஸ்டுகெதரின் பயன்பாடு கட்டாயமாக்கப்படலாம் என இது காட்டுகிறது. தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கக்கல்லூரி மாணவர்கள் இன்னும் டிரேஸ்டுகெதர் சாதனங்களை சமூக மன்றங்களிலிருந்து பெறாவிட்டால் அவர்களது பள்ளிகள் இச்சாதனங்களை இவர்களுக்கு விநியோகம் செய்யும்.
டிரேஸ்டுகெதர் சாதனங்கள் கட்டங்கட்டமாக விநியோகம் செய்யப்படும். "இந்தச் சாதனத்தைப் பள்ளிகளின் மூலம் பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோர்கள் படிவம் ஒன்றை நிரப்பி இதற்கான வேண்டுகோளைச் சமர்ப்பிக்கவேண்டும்," என்று கல்வியமைச்சு தெரிவித்தது.

