தமது மகளிடம் ஆபாசக் காணொளிகளைக் காட்டி, பிறகு அவரைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய 33 வயது ஆடவருக்கு இன்று 15 ஆண்டு சிறைத் தண்டனையுடன் 15 பிரம்படிகள் விதிக்கப்பட்டன.
அச்சிறுமி 4 வயதாக இருந்தபோது அவருக்கு இந்தக் கொடுமைகள் இழைக்கப்பட்டன. இந்தக் குற்றங்களைப் புரிந்தபோது அந்த ஆடவர் தமது மனைவியிடமிருந்து பிரிந்திருந்தார்.
2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வாரயிறுதிகளில் அச்சிறுமி அந்த ஆடவருடன் தங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 10 வயது. அவரது அடையாளத்தைக் காக்க குற்றம் புரிந்த ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

