காதலியை மூர்க்கத்தனமாக தாக்கிய மருத்துவருக்கு சிறை, பிரம்படி, அபராதம்

காதலியை மூர்க்கத்தனமாக தாக்கிய மருத்துவருக்கு சிறை, பிரம்படி, அபராதம்

1 mins read
15add78e-bf09-412d-922c-97e44a2a40e4
திருவாட்டி ரேச்சல் லிம் என் ஹுயியை அடித்துத் துன்புறுத்தி படுகாயம் விளைவித்த கிளேரன்ஸ் டியோ ஷுன் ஜியே (இடது) இனி மருத்துவராகப் பணியாற்ற முடியாது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

காதலியை மூர்க்கத்தனமாக தாக்கிய மருத்துவருக்கு மூன்று ஆண்டுகள், ஆறு மாதங்கள், இரண்டு வார சிறைத் தண்டனையும் நான்கு பிரம்படிகளும் $4,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.

கிளேரன்ஸ் டியோ ஷுன் ஜியே இனி மருத்துவராகப் பணியாற்ற முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டில் தமது காதலியை அவர் பலமுறை அடித்துத் துன்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அப்பெண் டியோவுடன் பாலியல் உறவு கொள்ள மறுத்தார்.

இதனால் அவரைத் தமது அறையில் வைத்து பூட்டிய டியோ, அப்பெண்ணைத் தொடர்ச்சியாகப் பலமுறை அடித்துத் துன்புறுத்தினார்.

இதுகுறித்து டியோவின் தந்தை போலிசாருக்குத் தெரிவித்தார். இதையடுத்து, டியோ கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் மூன்று வாரங்களுக்குத் தங்கி சிகிச்சை பெற்றார்.

அப்பெண்ணுக்கு மூளையில் ரத்தக் கசிவும், முகம் மற்றும் விரல் முதலிய பகுதிகளில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டன.