டுவெல்ஃப் கப்கேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான 43 வயது ஜேமி டியோ சாய் லின்னுக்கு $65,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அந்நிறுவனத்தில் பணிபுரிந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தைவிடக் குறைவான சம்பளம் வழங்கப்பட்டது.
இதை டியோ தடுக்கத் தவறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுவரை $98,900 சம்பள பாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டில் கோல்கத்தாவைச் சேர்ந்த டுன்செரி குழுமத்திடம் டியோவும் அவரது கணவர் ஓங்கும் டுவெல்ஃப் கப்கேக்ஸ் நிறுவனத்தை $2.5 மில்லியனுக்கு விற்றனர்.
ஓங் மீது 24 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவர் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

