குழந்தையின் தொண்டைக்குள் மாட்டிக்கொண்ட பல்துலக்கும் தூரிகை; பணிப்பெண்ணுக்குச் சிறை

2 mins read

குழந்தையின் தொண்டைக்குள் மாட்டிக்கொண்ட பல்துலக்கும் தூரிகை; பணிப்பெண்ணுக்குச் சிறை

11,000க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்கள், காணொளிகள் வைத்திருந்த ஆடவருக்கு ஒன்பது வாரச் சிறைத் தண்டனையும் $26,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எஸ்ஜி நாசி லெமாக் டெலிகிராம் உரையாடல் குழுவை நிர்வகிப்பவரான 39 வயது லியோங் தியேன்வெய்.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை எஸ்ஜி நாசி லெமாக்கிற்கு எதிராக போலிசில் 31 புகார்கள் செய்யப்பட்டன.

பணிப்பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இரண்டு வயது ஆண் குழந்தையின் தொண்டைக்குள் பல்துலக்க பயன்படுத்தப்படும் தூரிகை மாட்டிக்கொண்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதியன்று இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

மியன்மார் நாட்டுப் பணிப்பெண்ணான 24 வயது சி நார் யாவ் டான் குழந்தையின் பற்களைத் துலக்கிக்கொண்டிருந்தபோது சிறிது நேரம் கவனக்குறைவுடன் இருந்ததால் 15 சென்டிமீட்டர் நீளமுள்ள பல்துலக்கும் தூரிகை குழந்தையின் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது.

வலி தாங்க முடியாமல் அழுத குழந்தை ரத்த வாந்தி எடுத்தது.

குழந்தை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையின் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டிருந்த தூரிகை வெளியே எடுக்கப்பட்டது.

சம்பவம் காரணமாக குழந்தையின் தொண்டையில் புண் ஏற்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை அது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றது.

கவனக்குறைவால் குழந்தைக்குக் காயம் விளைவித்த குற்றத்துக்காக பணிப்பெண்ணுக்கு எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தைக் காக்க அதன் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.